Published : 08 Jan 2017 10:54 AM
Last Updated : 08 Jan 2017 10:54 AM

இமையம், கு.கணேசன், ஈரோடு தமிழன்பன், சிலம்பொலி செல்லப்பன் உட்பட 13 பேருக்கு தமிழ்ப் பேராய விருதுகள் அறிவிப்பு

எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தின் சார்பில் வழங்கப்படும் ‘தமிழ்ப் பேராய விருதுகள்’ அறிவிக்கப்பட் டுள்ளன.

இமையம், கு.கணேசன், ஈரோடு தமிழன்பன், சிலம்பொலி செல்லப் பன், மலர்மகன், ஓ.கே.குண நாதன், ஏ.தட்சிணாமூர்த்தி, இரா.கலைக் கோவன், வ.ஐ.செ.ஜெயபாலன், த.தனஞ்செயன், கண்ணன், வி.சு.துரைராசா, இனியவன் ஆகியோர் இந்த ஆண்டின் விருதுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்ப் படைப்புலகைச் சார்ந் தோருக்கு ஆண்டுதோறும் வழங் கப்படும் விருதுகளில் அதிகமான பரிசுத் தொகையைக் கொண்ட விருதுகளில் ஒன்று தமிழ்ப் பேராய விருது.

இந்த விருது படைப்பிலக்கியம், மொழிபெயர்ப்பில் தொடங்கி தமிழ்ச் சேவை வரை 12 பிரிவுகளின்கீழ் அளிக்கப்படுகிறது. ரூ. 22 லட்சம் மதிப்புள்ள இவ்விருதுகளுக்கு இந்த ஆண்டு தேர்வாகி இருப்ப வர்களின் பட்டியலை தமிழ்ப் பேராயத்தின் தலைவர் தி.பொ.கணேசன், செயலர் கரு.நாகராஜன் மற்றும் எஸ்ஆர்எம் பல்கலைக்கழக பதிவாளர் என்.சேதுராமன் மூவரும் வெளியிட்டனர்.

“2016-ம் ஆண்டுக்கான புதுமைப்பித்தன், பாரதியார், அழ.வள்ளியப்பா, ஜி.யூ.போப், அப்துல் கலாம், பரிதிமாற் கலை ஞர், பாரிவேந்தர் பைந்தமிழ் என 12 தலைப்புகளின் கீழான விரு துக்கு மொத்தம் 248 நூல்கள், 14 இதழ்கள், 6 சங்கங்கள், 27 அறிஞர்கள் பரிந்துரைக்கப்பட்டனர்.

எழுத்தாளர்களுக்கான விருதுகள்

புதுமைப்பித்தன் படைப்பிலக் கிய விருதைக் ‘கொலைச்சேவல்’ சிறுகதைத் தொகுப்புக்காக இமை யம் பெறுகிறார். பாரதியார் கவிதை விருதை ‘மலர்மகன் கவிதைகள்’ தொகுப்புக்காக மலர்மகன் பெறு கிறார். அழ.வள்ளியப்பா குழந்தை இலக்கிய விருதை ‘சொட்டுத் தண்ணீர்’ நூலுக்காக ஓ.கே.குண நாதன் பெறுகிறார். ஜி.யூ.போப் மொழிபெயர்ப்பு விருதை ‘பத்துப் பாட்டு’ ஆங்கில மொழிபெயர்ப் புக்காக ஏ.தட்சிணாமூர்த்தி பெறு கிறார். பெ.நா.அப்புசாமியின் அறிவியல் தமிழ் விருதை ‘சர்க்கரை நோயுடன் வாழ்வது இனிது’ நூலுக்காக மருத்துவர் கு.கணேசன் பெறுகிறார். ஆனந்த குமாரசாமி கவின்கலை விருதை ‘சோழர் கால ஆடற்கலை’ நூலுக்காக இரா.கலைக்கோவன் பெறுகிறார். விபுலானந்தர் படைப்பிலக்கிய விருதைக் ‘குறுந்தொகை’ நூலுக் காக இலங்கை கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் பெறுகிறார். அப்துல் கலாம் இளம் தமிழ் ஆய்வறிஞர் விருதைத் ‘தமிழகத் தில் புரத வண்ணார்கள்’ நூலுக்காக அதன் ஆசிரியர் த.தனஞ்செயன் பெறுகிறார்.

தமிழ்ச் சேவை விருதுகள்

சுதேசமித்திரன் தமிழ் இதழ் விருதை ‘காலச்சுவடு’ இதழுக்காக அதன் நிர்வாக ஆசிரியர் கண்ணன் பெறுகிறார். தொல்காப்பியர் தமிழ்ச் சங்க விருதை அகில உலக தமிழ்ப் பண்பாட்டு இயக்கத் தலைவர் வி.சு.துரைராசா மற்றும் இனியவன் பெறுகின்றனர். பரிதிமாற் கலைஞர் விருதை கவிஞர் ஈரோடு தமிழன்பன் பெறுகிறார். பாரிவேந்தர் பைந்தமிழ் விருதைத் தமிழறிஞர் சிலம்பொலி சு.செல்லப்பன் பெறுகிறார்.

இந்த விருதுகளுக்கான தேர்வுக் குழுவின் தலைவராக நீதிபதி கே.என்.பாஷாவும் உறுப்பினர் களாக வெ.மா.முத்துக்குமார், சாரதா நம்பியாரூரன், சேயோன், வே.பாலு ஆகியோர் செயல்பட்ட னர்” என்று தமிழ்ப் பேராய நிர்வாகிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x