தமிழகத்தில் இன்று மழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் இன்று மழை பெய்ய வாய்ப்பு
Updated on
1 min read

வெப்பச் சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியபோது, ‘‘வெப்பச் சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் 10-ம் தேதி (இன்று) ஓரிரு இடங்களில் மழையோ, இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் மாலை, இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்’’ என்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in