Published : 10 Aug 2016 08:42 AM
Last Updated : 10 Aug 2016 08:42 AM

தங்கம் விலை ரூ.104 உயர்ந்தது

சென்னையில் நேற்று தங்கம் விலை ரூ.104 உயர்ந்ததால், ஒரு பவுன் ரூ.23,648-க்கு விற்கப்பட்டது.

சமீபகாலமாக தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. சென்னையில் நேற்று முன்தினம் 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.2,943-க்கும், ஒரு பவுன் ரூ.23,544-க்கும் விற்கப்பட்டது. நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.13 என பவுனுக்கு ரூ.104 உயர்ந்தது. இதனால், ஒரு கிராம் ரூ.2,956-க்கும், ஒரு பவுன் ரூ.23,648-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இதேபோல, வெள்ளி விலையும் நேற்று ஏற்றத்தை சந்தித்தது. சென்னையில் நேற்று முன்தினம் வெள்ளி ஒரு கிராம் ரூ.50.60-க்கும், ஒரு கிலோ ரூ.47,280-க்கும் விற்கப்பட்டது. நேற்று ஒரு கிராமுக்கு 10 காசுகள் கூடி ரூ.50.70-க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.125 அதிகரித்து, ரூ.47,405-க்கும் விற்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x