

சேலம் முள்ளுவாடி ரயில்வே கேட்டில் சில தினங்களுக்கு முன்னர் மேம்பால கட்டுமானப் பணி தொடங்கியது. அப்போது, சேலம் மக்கள் குழுவைச் சேர்ந்த இயற்கை ஆர்வலர் பியூஸ் மானுஷ், கார்த்தி, முத்துச்செல்வம் ஆகியோர் பாலம் கட்ட நிலம் கையகப்படுத்திய பின்னர் கட்டுமானப் பணியை தொடங்க வேண்டும் என்று கூறி கட்டுமானப் பணியை தடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, பியூஸ் மானுஷ் உள்ளிட்ட மூவரையும் கடந்த 8-ம் தேதி போலீஸார் கைது செய்தனர். இவர்களில் கார்த்தி, முத்துச் செல்வம் இருவருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது. சேலம் குற்றவி யல் நடுவர் நீதிமன்றத்தில் பியூஸ் மானுஷ் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு தள்ளுபடியானது.
இந்நிலையில், பியூஸ் மானுஷை சிறைக் காவலர்கள் தாக்கியதாக தகவல் பரவியது.
இதையடுத்து மருத்துவ காரணங்கள் அடிப்படையில் பியூஸ் மானுஷுக்கு ஜாமீன் வழங்கக் கோரி சேலம் முதன்மை மாவட்ட நீதி மன்றத்தில் முன்விசாரணை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதுகுறித்து வழக்கறிஞர் மாயன் கூறிய தாவது:
பியூஸ் மானுஷுக்கு ஏற்கெ னவே முதுகில் புற்றுநோய் கட்டி இருந்து அகற்றப்பட்டுள் ளது. எனவே, மருத்துவக் கார ணங்கள் அடிப்படையில் பியூஸ் மானுஷுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மருத் துவ சான்றிதழ்களுடன் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளோம்.
நாளை (இன்று) மனு விசா ரணைக்கு வருகிறது. எனவே, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யும் முடிவை நாங்கள் நிறுத்தி வைத்துள்ளோம் என்றார்.
சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்
பியூஷ் மானுஷ் தாக்கப்பட்டது தொடர்பாக பல்வேறு அமைப்புகள் சார்பில் சென்னையில் நேற்று கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும், அவரை விடுதலை செய் யக் கோரி கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது.
இது தொடர்பாக திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி, திராவிடர் விடுதலைக் கழக பொதுச் செயலாளர் ‘விடுதலை’ ராஜேந்தி ரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பை சேர்ந்த சுந்தரராஜன், ஆகியோர் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
பியூஸ் மானுஷ் யார்?
ராஜஸ்தானை பூர்வீகமாகக் கொண்ட பியூஸ் மானுஷ், சேலத்தில் பிறந்தவர். திருமணமான இவர், சேலம் முள்ளுவாடி ரயில்வே கேட் அருகில் வசிக்கிறார். தருமபுரியை அடுத்த எர்றப்பட்டி என்ற இடத்தில் பியூஸ் மானுஷ் மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து சுமார் 150 ஏக்கர் கரடுமுரடான இடத்தில் ‘கூட்டுறவு வனம்’ என்ற பண்ணையை அமைத்துள்ளனர்.
சேலத்தில் சாக்கடை நீர் கலந்து அழிவு நிலையில் இருந்த மூக்கனேரியை தூர்வாரி, அவற்றை பறவைகள் வசிக்கக்கூடிய, நீர் நிரம்பிய ஏரியாக மாற்றியதில் பியூஷ் மானுஷுக்கு பெரும் பங்கு உண்டு. மேலும், அம்மாப்பேட்டை குமரகிரி ஏரியை தூர்வாரும் பணியை இவரது தலைமையிலான குழு முடித்துள்ளனர். சேலம் பள்ளப்பட்டி ஏரியை தூர்வாருவதற்கு அனுமதி கேட்டுள்ளனர்.