

நீலகிரி மாவட்டத்தில் ஹெலிகாப் டர், ரோப் கார் சேவை திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று சுற்றுலாதுறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித் தார்.
உதகையில் உள்ள படகு இல்லத்தை நேற்று ஆய்வு செய்த அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கடந்த 3 ஆண்டுகளாக, சுற்றுலா துறையில் தமிழகம் முதல் இடம் பிடித்து வருகிறது. உதகை படகு இல்லத்தில் உள்ள நிறை, குறைகளை தீர்ப்பது குறித்து அதிகாரிகளுக்கு எடுத் துரைக்கப்பட்டது. உதகையில் ஏற்படும் போக்குவரத்து நெரி சலுக்கு மறு சீரமைப்பு, குடிநீர், கழிப்பிடம் உட்பட பல்வேறு அடிப்படை வசதிகள் வரும் நிதி ஆண்டில் செயல்படுத்தப்படும்.
மேலும், பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ள ஹெலிகாப்டர், ரோப் கார் சேவை திட்டம் குறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, விரைவில் செயல்படுத்தப்படும் என்றார்.