

சென்னையில் அரசு, தனியார் நிலங்களில் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை 15 நாட்களில் முற்றிலும் அகற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ப.மகேஸ்வரி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
அரசு நிலங்கள், தனியார் பட்டா நிலங்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை முற்றிலும் அகற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. சீமை கருவேல மரத்தின் வேர்ப்பகுதி பூமியில் 40 அடி ஆழம் வரை சென்று நிலத்தடி நீரை உறிஞ்சி விடுகிறது. இதனால் அப்பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டத்தின் அளவு வெகுவாக குறைந்து வருகிறது. சீமை கருவேல மரங்கள் வளரும் இடங்களில் மற்ற மரங்கள் வளர விடாமல் தடுக்கப்படுகிறது.
நிலத்தடி நீர் ஆதாரங் களைப் பாது காக்க சீமை கருவேல மரங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இது தொடர் பாக மாவட்ட அளவில், சார் ஆட்சி யர், வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர்களுக்கு கூட்டம் நடத்தப்பட்டது. சீமை கரு வேல மரங்கள் அரசு இடங்களில், நிலங்களில் வளர்ந்திருந்தால், அந்தந்த துறைகளே அகற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தனியார் இடங் களில் வளர்ந்திருந்தால் சம்பந்தப் பட்ட உரிமையாளர்கள் அகற்றும் நடவடிக்கைகளை மேற்கொள் வதையும் முழுமையாக கண் காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை மாவட்டத்தில் வளர்ந் துள்ள சீமை கருவேல மரங்களை 15 தினங்களுக்குள் அகற்ற வேண் டும். இப்பணிகளை தண்டையார் பேட்டை சார் ஆட்சியர் மற்றும் எழும்பூர் வருவாய் கோட்டாட்சியர் ஆகியோர் தலைமையில் கோட்ட அளவில் பொதுப்பணி, நெடுஞ்சாலை, மாநகராட்சி மண்டல அலுவலர்கள், வனத்துறை மற்றும் மின்வாரிய துறைகளை ஒருங்கிணைத்து முடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, உரிய துறைகள் மற்றும் தனி நபர்கள் சீமை கருவேல மரங்களை அகற்றும் பணியை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.