கம்யூனிஸ்ட்கள் சுயநலமாக முடிவு எடுப்பதில்லை: கருணாநிதிக்கு ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன் பதில்

கம்யூனிஸ்ட்கள் சுயநலமாக முடிவு எடுப்பதில்லை: கருணாநிதிக்கு ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன் பதில்
Updated on
1 min read

கம்யூனிஸ்ட்கள் சுயநல அடிப்படையில் எந்த முடிவையும் எடுப்பதில்லை என திமுக தலைவர் கருணாநிதிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செய லாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் ஆகியோர் பதில ளித்துள்ளனர்.

இது தொடர்பாக நேற்று வெளி யிட்ட அறிக்கையில் அவர்கள் கூறியிருப்பதாவது:

ஜி.ராமகிருஷ்ணன்:

பொதுவுடமை வாதிகள் ஒரு சிலரின் சுயநலத்தினால் சட்டப்பேரவையில் கம்யூனிஸ கொள் கைகள் எதிரொலிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுபற்றி நாம்தான் வருத்தப்படுகிறோமே தவிர, அக்கட்சி யின் தலைவர்கள் வருத்தப்படுவதாக தெரியவில்லை என திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

தமிழகத்தில் கம்யூனிஸ்ட்கள் வளராமல் பார்த்துக்கொண்டேன் என கடந்த காலங்களில் குறிப்பிட்டவர், தற்போது சட்டப்பேரவையில் கம்யூ னிஸ்ட்கள் இல்லையே என வருத்தப் பட்டுள்ளார். இது அக்கறையினால் ஏற்பட்ட ஆதங்கமாக தெரியவில்லை. அவதூறு செய்ய இதை ஒரு வாய்ப்பாக அவர் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.

ஒரு சில இடங்களுக்காக கொள் கையை அடகுவைக்க தயாராக இருப் பதுதான் சுயநலம். ஆனால் வெற்றி, தோல்வியைப் பற்றி கவலைப்படாமல் கொள்கை அடிப்படையில் மாற்று அரசியலை முன்வைத்து தேர்தலைச் சந்திப்பது சுயநலமாக இருக்க முடியாது. 1998 வரை பாஜக அரசை விமர்சித்துவிட்டு. ஒரே நாள் நள்ளிரவில் வாஜ்பாய் அரசுக்கு ஆதரவு கொடுத்தவர் கருணாநிதி.

அதுபோல கம்யூனிஸ்ட் தலை வர்கள் யாரும் சுயநலத்துக்காக எந்த ஒரு முடிவையும் எடுத்ததில்லை. கம்யூனிஸ்ட் கட்சியில் சுயநலவாதிகள் இருக்க முடியாது. அதுவும் அரசியல் முடிவை ஒருவரின் சுயநலத்துக்காக எடுக்க முடியாது. இதை கருணாநிதி நன்கறிவார்.

இரா.முத்தரசன்:

பிற கட்சிகளை வம்புக்கு இழுப்பதும், மற்ற கட்சிகளுக் குள் குழப்பத்தை ஏற்படுத்துவதும் கருணாநிதிக்கு வாடிக்கையாகும். கம்யூனிஸ்ட் கட்சியில் திமுகபோல ஒரு தலைவரோ, குடும்பமோ எந்த முடிவையும் எடுக்க முடியாது. கொள்கை அடிப்படையில் அதிமுக - திமுக அல்லாத மாற்று அரசியலை முன்வைக்க வேண்டும் என்பதற்காக இடதுசாரிகள் கூட்டணி அமைத்தன. சுயநலம் கொண்டோருக்கு கம்யூனிஸ்ட் கட்சியில் இடமில்லை என்பதை கருணாநிதியும் அறிவார்.

சட்டப்பேரவையில் கம்யூ னிஸ்ட்கள் இடம் பெறாதது குறித்து பொதுமக்களும் பத்திரிகையாளர் களும் கவலைப்படத்தான் செய்கி றார்கள். பேரவை விவாதங்களைக் கண்டு முகம் சுளிக்கிறார்கள். சட்டப் பேரவையில் இடம் பெறவில்லை என்றா லும் மக்கள் மன்றத்தில் நின்று கம்யூ னிஸ்ட்கள் போராடுவார்கள். வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கை மக்களுக்கு உள்ளது. கம்யூனிஸ்ட்கள் மீது கரிசனம் காட்டிய கருணாநிதிக்கு நன்றி.

எதிர்காலத்தில் மாற்று சக்தியாக அதிகார மையத்தில் அமர்ந்து பணி யாற்ற மக்கள் வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கையில் கம்யூனிஸ்ட்களின் பணி தொடர்கிறது. இதை பலவீனப்படுத்தும் முயற்சிகள் எந்த வகையிலும் வெற்றி பெறாது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in