

ராம்குமாரின் மரணம் தொடர்பாக சிறைத்துறை அதிகாரிகள், மருத் துவர்களிடம் திருவள்ளூர் மாவட்ட மாஜிஸ்திரேட் தமிழ்ச்செல்வி விசாரணை நடத்தினார்.
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் (24), புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். நேற்று முன்தினம் அறையில் இருந்த மின்வயரை கடித்து ராம்குமார் தற்கொலை செய்துகொண்டதாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர். அவரது மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக உறவினர்களும் வழக்கறிஞர்களும் குற்றம்சாட்டினர். இதையடுத்து, மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட மாஜிஸ்திரேட் தமிழ்ச் செல்வி, நேற்று காலை 9.20 மணி அளவில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு வந்து, பிரேத பரிசோதனைக் கூடத்தில் வைக்கப்பட்டிருந்த ராம்குமாரின் சடலத்தைப் பார்வையிட்டார். அங்கிருந்த மருத்துவர்களிடம் ராம்குமார் சடலத்தின் சில பகுதி களை சுட்டிக்காட்டி அதுகுறித்து கேட்டறிந்தார்.
அதைத் தொடர்ந்து காலை 11.30 மணி அளவில் புழல் மத்திய சிறைக்கு சென்ற மாஜிஸ்திரேட், அங்கு ராம்குமார் அடைக்கப்பட்டிருந்த அறையைப் பார்வையிட்டார். ராம்குமார் மின் வயரை கடித்ததாக சொல்லப்பட்ட இடத்தையும் ஆய்வு செய்தார். சிறை கண்காணிப்பாளர் அன்பழ கன், ஜெயிலர் ஜெயராமன், மருத்துவர் நவீன், பணியில் இருந்த போலீஸார் ஆகியோரிடம் விசாரணை நடத்தினார்.
விசாரணை அறிக்கை
அனைவரையும் தனித்தனியாக அழைத்து, ‘ராம்குமார் இறந்தபோது எங்கு இருந்தீர்கள்? என்ன செய்து கொண்டு இருந்தீர்கள்? காப்பாற்ற முயற்சி செய்தீர்களா? ராம்குமார் உடன் இருந்தது யார், யார்? அவரை காப்பாற்ற எடுக்கப்பட்ட உடனடி நடவடிக்கை என்ன? ராம்குமார் மரண வாயிலில் இருந்த போது எடுக்கப்பட்ட உடனடி நடவடிக்கை என்ன?’ என்பன உட்பட பல கேள்விகளை கேட்ட தாக சிறைத்துறை போலீஸார் தெரிவித்தனர். சுமார் 3 மணி நேரம் சிறையில் விசாரணை நடத் திய மாஜிஸ்திரேட் தமிழ்ச்செல்வி, மதியம் 2.35 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். விசார ணை அறிக்கையை விரைவில் உயர் அதிகாரிகளிடம் அவர் வழங்குவார் என கூறப்படுகிறது.