

ஜல்லிக்கட்டுக்காக டெல்லியில் பிரதமரைச் சந்தித்து மேற் கொண்ட நடவடிக்கைகள் குறித்து அதிமுக பொதுச் செய லாளர் வி.கே.சசிகலாவிடம் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எடுத்துரைத்தார். இதையடுத்து, ஜல்லிக்கட்டை விரைந்து நடத்து வது தொடர்பாக முதல்வர், அமைச் சர் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் சசிகலா ஆலோசனை நடத்தினார்.
இதுதொடர்பாக அதிமுக தலைமை அலுவலகம் நேற்று இரவு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழர்களின் கலாச்சார உரி மையும், பெருமையுமான ஜல்லிக் கட்டுக்கான தடையை நீக்கக் கோரி தமிழகம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் தொடர் போராட்டங்களில் ஈடு பட்டு வருகின்றனர். இதையடுத்து, தமிழக முதல்வரும் அதிமுக பொருளாளருமான ஓ.பன்னீர் செல்வம் டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்தார். ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.
அதிமுகவின் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கொண்ட குழுவும் டெல்லிக்கு சென்று குடியரசுத் தலைவர் உள்ளிட்டோரை சந்தித்து, ஜல் லிக்கட்டுப் பிரச்சினையில் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத் துமாறு வேண்டுகோள் விடுத்தனர்.
இந்நிலையில், சென்னை திரும்பிய முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நேற்று அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலாவை சந்தித்தார். ஜல்லிக்கட்டை விரைந்து நடத்துவதற்காக பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து அவர் விவரமாக எடுத்துரைத்தார். இதைத் தொடர்ந்து, ஒட்டுமொத்த தமிழக மக்களின் வேண்டுகோளான ஜல்லிக்கட்டை விரைந்து நடத்துவது குறித்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சி.சீனிவாசன், எடப்பாடி கே.பழனிசாமி, பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளுடன் வி.கே.சசிகலா ஆலோசனை நடத்தினார். இவ்வாறு அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.