கட்டணம் செலுத்த சென்னை பல்கலை. புதிய ஏற்பாடு

கட்டணம் செலுத்த சென்னை பல்கலை. புதிய ஏற்பாடு
Updated on
1 min read

சென்னை பல்கலைக்கழக மாணவ-மாணவிகள் பயன்பெறும் வகையில் பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) மூலமாக ஆன்லைனில் தேர்வுக் கட்டணம் உட்பட இதர கட்டணங்களை செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம் மாணவ-மாணவிகள் அனைத்து விதமான கட்டணங்களையும் எஸ்பிஐ ஆன்லைன் வசதி மூலமாக செலுத்திவிடலாம்.

இதுதொடர்பான கூடுதல் விவரங்களை www.unom.ac.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம் என்று சென்னை பல்கலைக்கழக பதிவாளர் பா.டேவிட் ஜவகர் தெரி வித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in