Published : 16 Jun 2016 09:02 AM
Last Updated : 16 Jun 2016 09:02 AM

தமிழ்நாடு இசை பல்கலை.யில் முதுநிலை பட்டயப் படிப்புகள் அறிமுகம்

தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகத்தில் இந்த ஆண்டு புதிதாக முதுநிலை பட்டயப் படிப்புகள் மற்றும் 3 ஆண்டு பகுதி நேர படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன.

இதுகுறித்து, தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலை பல்கலைக் கழக இணைவேந்தரும் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சருமான சேவூர் எஸ்.ராமச்சந்திரன், துணைவேந்தர் வீணை ஈ.காயத்ரி ஆகியோர் நேற்று சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகம், கடந்த 2013-ம் ஆண்டு தொடங்கப் பட்டது. இப்பல்கலைக்கழகத்தில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், மிருதங்கம் மற்றும் பரதநாட்டியம் ஆகியவற்றில் முதுநிலைப் பாடப் பிரிவுகளும், டிஜிட்டல் போட்டோகிராபி மற்றும் விஷுவல் கம்யூனிகேஷன் பிரிவில் முது நிலை பட்டய வகுப்பும் நடத்தப் பட்டு வருகிறது.

இந்த ஆண்டு புதிதாக 10 பிரிவு களில் ஓராண்டுக்கான பட்டயப் படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. வீடியோகிராபி, ஆடியோகிராபி, எடிட்டிங், டிராயிங் அண்ட் பெயின்டிங், கிளே மாடலிங், 2டி, 3டி அனிமேஷன், டெக்ஸ்டைல் அண்ட் பிரிண்டிங், தஞ்சாவூர் பெயின்டிங், மூலிகை அழகுக் கலை உள்ளிட்ட பாடப் பிரிவு கள் தொடங்கப்பட்டுள்ளன. அதே போல், 3 ஆண்டு பகுதி நேர படிப்பு களாக பெயின்டிங், சிற்பக்கலை, விஷுவல் கம்யூனிகேஷன் ஆகிய வையும் தொடங்கப்பட்டுள்ளன.

விண்ணப்பப் படிவத்தின் விலை ரூ.300. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.150 கட்டணம். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஜூலை 11-ம் தேதியாகும். கூடுதல் விவரங்களுக்கு www.tnmfau.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x