

இந்து சமய அறநிலையத் துறை கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர், பட்டாச்சாரியார், ஓதுவார்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர், பட்டாச்சாரியார், ஓதுவார் களுக்கு அனுபவம் வாய்ந்தவர்கள் மூலம் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி முதல் கட்டமாக கடந்த 13-ம் தேதி தொடங்கி வரும் மார்ச் 10-ம் தேதி வரை இப்பயிற்சி நடைபெறுகிறது.
வடபழநி ஆண்டவர் கோயிலில் அர்ச்சகர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் திறன் மேம்பாட்டுப் பயிற் சியை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச் சந்திரன், இந்து சமய அறநிலை யத் துறை ஆணையர் மா.வீரசண்முகமணி ஆகியோர் நேற்று பார்வையிட்டனர். பயிற்சி பெற்று வருபவர்களை ஊக்கப் படுத்தி பாராட்டு தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியின்போது, சென்னை மண்டலஇணை ஆணையர் அ.தி.பரஞ்ஜோதி, வடபழனி கோயில் துணை ஆணையர் மற்றும் செயல் அலுவலர் ச.சிவகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.
திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலில் ஓதுவார்களுக்கும், பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி கோயிலில் பட்டாச்சாரியார்களுக்கும், திருவொற்றியூர் தட்சிணாமூர்த்தி சுவாமி கோயிலில் அர்ச்சகர்களுக்கும் அளிக்கப்பட்டு வரும் பயிற்சியையும் அமைச்சர் ராமச்சந்திரன் பார்வையிட்டார்.
பயிற்சியின்போது, திருஞான சம்பந்தர் அற்புத பதிகம் விளக்கம், திருநாவுக்கரசர் அருளிய பாடல்கள், அற்புதங்கள், 11-ம் திருமுறை, திருப்புகழ், பிள்ளைத் தமிழ், கொடிக்கவி குறித்த சைவ சித்தாந்த விளக்கம் அளிக்கப்படும். மேலும், கணபதி உபநிஷம், திருமுறைகள், மந்திர புஷ்பம், மங்கள சுலோகங்கள் பயன்பாடு குறித்தும் பயிற்சி அளிக்கப்படும்.
பயிற்சியில் கலந்துகொள்ப வர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.2 ஆயிரமும் நிறைவில் சான்றிதழும் வழங்கப்படும்.