ஆசைக்கு இணங்க மறுத்த இளம்பெண்ணை தீ வைத்து கொளுத்திய இளைஞருக்கு ஆயுள்: மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு

ஆசைக்கு இணங்க மறுத்த இளம்பெண்ணை தீ வைத்து கொளுத்திய இளைஞருக்கு ஆயுள்: மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு
Updated on
1 min read

சென்னையில் ஆசைக்கு இணங்க மறுத்த இளம் பெண்ணை தீ வைத்து கொளுத்திய வாலிப ருக்கு மாவட்ட மகளிர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது.

சென்னை பெரவள்ளூர் ஜிகேஎம். காலனியைச் சேர்ந்தவர் தீனா என்ற தினகரன்(28). இன்னும் திருமணமாகவில்லை. இவர் அதே தெருவில் வசித்த திருமணமாகி 2 குழந்தைகளுக்கு தாயான சங்கீதாவுடன்(28) நெருங்கிப் பழகினார். கடந்த 2013 மார்ச் 14-ம் தேதி வீட்டில் தனியாக இருந்த சங்கீதாவை தனது ஆசைக்கு இணங்கும்படி தினகரன் வற்புறுத்தியுள்ளார். ஆனால் அதற்கு சங்கீதா அனுமதிக்காததால், ஆத்திர மடைந்த தினகரன், சங்கீதா மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்து கொளுத்தினார். இதில் படுகாயமடைந்த சங்கீதா தனது மரண வாக்குமூலத்தில், தினகரனுடன் சகோதரரைப் போல் பழகியதாகவும், ஆனால் அவர் தன்னுடன் உடலுறவு கொள்ள முற்பட்டதை தடுத்ததால் தீ வைத்து எரித்ததாகவும் தெரிவி்த்துவிட்டு 2 நாளில் இறந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி ஆர். கலைமதி, குற்றம் சாட்டப்பட்ட தினகரனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 13 ஆயிரம் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in