குற்றவாளிகளைப் போல் எம்.எல்.ஏ.க்களை நடத்துவதா?- குஷ்பு சாடல்

குற்றவாளிகளைப் போல் எம்.எல்.ஏ.க்களை நடத்துவதா?- குஷ்பு சாடல்

Published on

குற்றவாளிகளைப் போல் எம்.எல்.ஏ.க்களை நடத்துவதற்கு இந்தப் பெண்ணுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்று குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.

முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா இருவருக்கும் இடையே பனிப்போர் ஏற்பட்டுள்ளது. அதிமுக தலைமை செயலகத்தில் எம்.எல்.ஏக்கள் கூட்டம் சசிகலா தலைமையில் நடைபெற்றது.

அக்கூட்டம் முடிந்தவுடன் ஒட்டுமொத்த எம்.எல்.ஏக்களும் பேருந்தில் ஏற்றிக் கொண்டுச் செல்லப்பட்டனர். அங்கிருந்து எங்கு அழைத்துச் சொல்கிறார்கள், எங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர் உள்ளிட்ட எந்தொரு தகவலையும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.

இது குறித்து குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில், "கிட்டத்தட்ட கடத்தப்பட்டதுபோல் சொகுசுப் பேருந்தில் அழைத்துச் செல்லப்பட்ட 131 எம்.எல்.ஏ.க்கள் பற்றிதான் எனது எண்ணங்கள் விரிகின்றன.

ஜனநாயகத்தில், இப்படிப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கு மாண்பு என்று ஏதாவது இருக்கிறதா? சிறைச்சாலையில் இருக்கும் குற்றவாளிகளைப் போல் எம்.எல்.ஏ.க்களை நடத்துவதற்கு இந்தப் பெண்ணுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது. பணமா? அதிகாரமா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார் குஷ்பு.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in