Last Updated : 26 Sep, 2016 09:46 AM

 

Published : 26 Sep 2016 09:46 AM
Last Updated : 26 Sep 2016 09:46 AM

மனு அனுப்பி 5 ஆண்டாகியும் பயனில்லை: பாரதியின் படைப்புகளை 20 மொழிகளில் வெளியிட சாகித்ய அகாடமி முன்வருமா?

உயர் நீதிமன்ற உத்தரவுப்படி சாகித்ய அகாடமிக்கு முறையாக மனு அனுப்பி 5 ஆண்டுகளாகியும் பாரதியின் படைப்புகள் அரசியலமைப்புச் சட்டம் அங்கீகரித்துள்ள 20 மொழிகளில் வெளியாவது தாமதமாகி வருகிறது.

மகாகவி சுப்ரமணிய பாரதியின் கவிதைகள், பாடல்களை 20 மொழி களில் வெளியிடக் கோரி மது ரையைச் சேர்ந்த பாரதியார் சிந்த னையாளர் மன்றத்தின் பொதுச் செய லாளர் ரா.லெட்சுமிநாராயணன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2011-ல் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், ‘பாரதியின் கவிதைகளை 20 மொழிகளில் வெளி யிடக் கோரி அனுப்பிய மனுவை நிராகரித்து, மத்திய தகவல் ஒலி பரப்புத்துறை செயலர் (வெளியீட்டு பிரிவு) 28.11.2008-ல் உத்தரவிட்டார். அவரது உத்தரவை ரத்து செய்து பாரதியின் கவிதைகளை அனைத்து மொழிகளிலும் வெளியிட உத்தர விட வேண்டும்’ என கூறியிருந்தார்.

இந்த மனு தனி நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தபோது, ‘மத்திய அரசு சார்பில் மொழி பெயர்ப்புப் பணியை தகவல் ஒலிபரப்புத் துறையின் வெளியீட்டு பிரிவு மேற்கொள்வதில்லை. மனுதாரர் தனது கோரிக்கைக்காக சாகித்ய அகாடமி மற்றும் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை சார்ந்த தேசிய புத்தக அறக்கட்டளையை அணுகலாம்’ என தெரிவிக்கப்பட்டது. இதைய டுத்து சாகித்ய அகாடமி, தேசிய புத்தக அறக்கட்டளையை அணுக பாரதியார் சிந்தனையாளர் மன்றத்துக்கு உரிமை வழங்கி தனி நீதிபதி 28.3.2011-ல் உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து, 28.6.2011-ல் சாகித்ய அகாடமி செயலருக்கு லெட்சுமிநாராயணன் ஒரு கடிதம் அனுப்பினார். அதில் ‘‘39 ஆண்டு கள் வாழ்ந்த பாரதியார் தனது பாடல்கள், கவிதைகள் மூலம் நாட்டின் விடுதலைக்காகவும், மறுமலர்ச்சிக்காகவும் சிறப்பாகத் தொண்டாற்றினார். அவரது படைப்பு கள் நாட்டில் உள்ள அனைத்து இளைஞர்களையும் சென்றடைய வேண்டும். இதனால் அவரது அனைத்து படைப்புகளையும் 20 மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என குறிப்பிடப்பட்டி ருந்தது. இந்த கடிதம் அனுப்பி 5 ஆண்டுகளை கடந்தும், சாகித்ய அகாடமி இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள வில்லை.

இதுகுறித்து லெட்சுமி நாரா யணன் கூறியதாவது:

பக்தி பாடல்கள், ஞானப் பாடல் கள், பாஞ்சாலி சபதம், குயில் பாட்டு, குருவிப்பாட்டு என 266 படைப்புகளை பாரதியார் அளித்துள்ளார். அவர் தனது படைப்புகளில் மக்கள் எதை செய்ய வேண்டும், எதை செய்யக் கூடாது என்பதைத் தெரிவித்துள்ளார். அவரது படைப்புகள் அனை வருக்கும் பொதுவானவை. இதனால் பாரதியாரின் படைப்பு களை அனைத்து மொழியினரும் படித்துத் தெரிந்துகொள்ளும் வகையில் மொழிபெயர்த்து வெளியிட தாமதிக்காமல் சாகித்ய அகாடமி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x