

தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல் வத்தை தலைமைச் செயலாளர், டிஜிபி ஆகியோர் நேற்று அவரது வீட்டில் சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினர்.
அதிமுக பொதுச் செயலாளரை முதல்வராக்க தீவிர முயற்சி நடந்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிருப்திக் குரல் எழுப்பியுள்ள முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தற் போது 5 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும், பல மூத்த நிர்வாகிகள் அவருக்கு ஆதரவாக உள்ளனர்.
இந்த பரபரப்பான சூழலில், சென்னை கிரீன்வேஸ் சாலை யில் உள்ள முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் வீட்டுக்கு தமிழக டிஜிபியான டி.கே.ராஜேந்திரன் நேற்று காலை 10.10 மணிக்கு வந்தார். அவரைத் தொடர்ந்து, தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் 10.20 மணிக்கு வந்தார். பின்னர், இரு வரும் முதல்வருடன் 20 நிமிடங்கள் ஆலோசனை நடத்திவிட்டு 10.40 மணிக்கு புறப்பட்டுச் சென்றனர்.
சென்னையில் ஆளுநரை வரவேற்பது தொடர்பாக அவர் கள் ஆலோசனை நடத்தினர். மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்சினை, நிர்வாகம் தொடர்பாக ஆளுநருக்கு அறிக்கை அளிக்க வேண்டி இருப்பதால், அதுதொடர் பாகவும் முதல்வரிடம் தலைமைச் செயலாளர் ஆலோசனை நடத்தி யுள்ளார். இதுதவிர, சென்னை காவல்துறை ஆணையர் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகளின் செயல்பாடுகள், சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது தொடர்பாகவும் டிஜிபி ஆலோசனை நடத்தினார். இதையடுத்து, சென்னை உட்பட தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் மாற்றப் படலாம் என்ற தகவலும் வெளி யானது.
முன்னதாக, அதிமுக சட்டப் பேரவை கட்சித் தலைவராக சசிகலா கடந்த 5-ம் தேதி தேர்வு செய்யப்பட்டார். மறுநாள் காலை, அவரை தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்திய நாதன் மரியாதை நிமித்தமாக சந்தித் தார். அதன்பிறகு, சசி கலாவையோ, முதல் வரையோ உயர் அதி காரிகள் யாரும் சந்திக் கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.