Last Updated : 21 Sep, 2016 09:21 AM

 

Published : 21 Sep 2016 09:21 AM
Last Updated : 21 Sep 2016 09:21 AM

உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டி: 15 சதவீத வாக்குகளை பெற்றாக வேண்டும் - மாவட்ட செயலாளர்களுக்கு விஜயகாந்த் உத்தரவு

உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடும் என்றும் 15 சதவீத வாக்குகளை பெறுகிற வகையில் தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக, மக்கள் நலக்கூட்டணி யுடன் இணைந்து தேர்தலை சந்தித் தது. தேர்தலில் தேமுதிக தோல் வியை சந்தித்ததையடுத்து மக்கள் நலக்கூட்டணியிலிருந்து அக்கட்சி வெளியேறியது. உள்ளாட்சித் தேர்த லில் போட்டியிடலாமா வேண்டாமா என்பது தொடர்பாக தேமுதிக தலைமைக்கழக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட விஜய காந்த், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதென்று முடிவெடுத் தார். உள்ளாட்சித் தேர்தலில் போட்டி யிட விரும்புவோர் 21-ம் தேதி முதல் விருப்ப மனுக்களை பெற்று கொள்ளலாம் என்று விஜயகாந்த் கடந்த 19-ம் தேதி அறிவித்தார்.

இந்தநிலையில், உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வது தொடர் பாக மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் விஜயகாந்த் தலைமையில் சென்னை கோயம்பேட்டில் நேற்று நடந்தது.

இந்தக் கூட்டத்தில் விஜயகாந்த் பேசியது குறித்து மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது:

உள்ளாட்சித் தேர்தல் தொடர் பான ஆலோசனைக் கூட்டம் விஜய காந்த் தலைமையில் சுமார் 1 மணி நேரம் நடந்தது. இந்தக்கூட்டத்தில் பேசிய விஜயகாந்த், ‘‘ரசிகர் மன்ற மாக இருந்தபோது உள்ளாட்சி அமைப்புகளிலிருந்துதான் நமது பணிகளை தொடங்கினோம். தற் போது மீண்டும் அந்த இடத்திலி ருந்து பணிகளை தொடங்க வேண் டிய கட்டத்தில் உள்ளோம். சட்டப் பேரவைத் தேர்தல் தோல்விகளை மறந்துவிட்டு உள்ளாட்சித் தேர் தலுக்காக உழைக்க வேண்டும்.

கடந்த உள்ளாட்சித் தேர்தலின் போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் டுடன் இணைந்து 10.11 சதவீத வாக்குகளை பெற்றோம். இந் நிலையில், இந்த முறை தனித்தே தேர்தலை சந்திப்பதுதான் சரி யானதாக இருக்கும். எனவே, தனித்து சந்தித்து நமது பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். வெற்றி, தோல்வி களுக்கு அப்பாற்பட்டு 15 சதவீதம் வாக்கு வங்கியை குறி வைத்து தேர்தல் வேலைகளை செய்யுங்கள்’ என்று விஜயகாந்த் பேசினார்.

இவ்வாறு அவர் கூறினார்.

தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனுக் கள் இன்று முதல் வரும் 30-ம் தேதி வரை வழங்கப்படவுள்ளன. சென்னை மாநகராட்சி வார்டுகளுக் கான விருப்ப மனுக்கள் தேமுதிக தலைமை அலுவலகத்தில் காலை 9.15-லிருந்து 10.15 வரை வழங்கப் படவுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x