

கோவையில் தமிழக அரசு சார்பில் நடத்தப்பட்ட 'ரேக்ளா' போட்டிகள் மாணவர்கள் எதிர்ப்பு காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டது. அமைச்சரின் காரை அவர்கள் முற்றுகையிட்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அவசரச் சட்டம் மூலம் ஜல்லிக் கட்டு, ரேக்ளா போட்டிகள் நடத் தப்படும் என அரசு அறிவித்ததைத் தொடர்ந்து, கோவை கொடிசியா மைதானத்தில் தமிழ்நாடு ரேக்ளா கிளப்புடன் இணைந்து ரேக்ளா போட்டியை முதல்முறையாக அரசு விழாவாக நடத்த அதிகாரிகள் திட்டமிட்டனர்.
அதன்படி நேற்று தொடங்கிய ரேக்ளா போட்டியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார். பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந் தாலும், போராட்டச் சூழ லுக்கு அஞ்சி ரேக்ளா வண்டிகள் கலந்து கொள்ளவில்லை. 4 வண்டிகள் மட்டுமே பங்கேற்றன.
மறியல் போராட்டம்
இதனிடையே அவசரச் சட்டம் மூலம் ரேக்ளா போட்டிகள் நடத்த எதிர்ப்பு தெரிவித்து அங்கு போராட்டக் குழுவின் ஒருபகுதி யினர் திடீரென நுழைந்தனர். ரேக்ளா நடைபெறும் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட னர். அப்போது, அமைச்சர் வேலு மணி, மாணவர்கள் போராட்டத் தைக் கைவிடும்படி வலியுறுத்தி னார். ஆனால் தொடர்ந்து தங்களது கோரிக்கையை முன்வைத்து, அவர்கள் முன்னேறிச் சென்றதால் போலீஸாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனையடுத்து நிகழ்ச்சியை பாதியில் ரத்து செய்துவிட்டு அமைச்சர் உள்ளிட்டோர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
ஊத்துக்குளி
திருப்பூர் மாவட்டம் ஊத்துக் குளி வட்டம் பல்லகவுண்டம் பாளையத்தில் ஊர் பொதுமக் கள் சார்பில், ஜல்லிக்கட்டு நடத்த ஏற்பாடுகள் நடைபெற்றன. இந் நிலையில், 'அலங்காநல்லூர் மற் றும் பிற பகுதிகளில் போராட் டங்கள் நடைபெறும்போது, ஜல்லிக்கட்டு நடத்தினால், அது அவர்களது போராட்டத்தை கொச்சைப்படுத்துவது போல் ஆகும். எனவே மாணவர் போராட் டம் முடியும் வரை, போட்டி நடத்துவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம்' போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.