

மக்கள் விருப்பத்துக்கு ஏற்ப அதிமுக எம்எல்ஏக்கள் நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்று கோரி தமிழகம் முழுவதும் வாக்காளர் பேரணி நடைபெறும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். அதன்படி, ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்து, குடியாத்தம் நகரச் செயலாளர் ஜெ.கே.என்.பழனி தலைமையில் நேற்று பேரணி செல்ல முயன்ற 150-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப் பட்டனர்.
வாணியம்பாடியில் தடையை மீறி பேரணி சென்ற 39 பேரை போலீஸார் கைது செய்தனர். முன் னாள் அமைச்சர் ஆர்.வில்வநாதன் தலைமையில் 40-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் காவேரிப்பாக்கம் பேருந்து நிலையம் அருகே நேற்று திரண்டனர். அவர்கள், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக கோஷமிட்டனர்.
மதுரையில் முன்னாள் மண்டல தலைவர் சாலைமுத்து தலைமை யில் ஊர்வலம் செல்ல முயன்ற 26 பேரை போலீஸார் கைது செய்தனர். தேனியில் 1,000 பேர் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நடந்தது.
கடலூர் மாவட்டத்தில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், கடலூர் கிழக்கு மாவட்ட அவைத் தலைவருமான கோ.ஐயப்பன் தலைமையில் 800-க்கும் மேற்பட் டோர் கடலூர் வட்டாட்சியர் அலுவல கம் முன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் சசிகலாவுக்கு எதிராக முழக்கமிட்டனர்.
விழுப்புரம் புதிய பேருந்து நிலை யம் அருகே நகராட்சி திடலில் தீபா பேரவையைச் சேர்ந்த மணி கண்டன் மற்றும் ஓ.பி.எஸ். ஆதர வாளர் திருப்பதி பாலாஜி உட்பட 56 பேர் போலீஸாரின் தடையை மீறி ஆர்பாட்டம் நடத்தி னர்.
திருப்பூர் மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம், சாலை மறியல் போராட்டம் நடத்திய 900 பேர் கைது செய்யப்பட்டனர்.
எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் மேற்கு சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் 4 பேர் உட்பட 100 பேரை போலீஸார் கைது செய்தனர். ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம் உள்ளிட்ட 109 பேரும், மேற்கு தொகுதியில் 10 பேரும், மொடக்குறிச்சி தொகுதியில் 35 பேரும், பெருந்துறையில் 100 பேரும், சத்தியமங்கலத்தில் 99 பேரும், பவானியில் 31 பேர், செங்கோட்டையனின் தொகுதி யான கோபியில் 67 பேரும் கைது செய்யப்பட்டனர்.
ராசிபுரத்தில் 80 பேரும், நாம கிரி பேட்டையில் 50 பேரும் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகினர். சசிகலா ஆதரவு எம்எல்ஏக்களை கண்டித்து, பர்கூர் மற்றும் ஓசூரில் கண்டன ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்ட 255 பேரை போலீ ஸார் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல் லூர் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன் மறியலில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் பூனாட்சி, முன்னாள் எம்எல்ஏ பாலன் உட்பட 150 பேரை போலீஸார் கைது செய்தனர். மணப்பாறை பேருந்து நிலையம் அருகே தடையை மீறி பேரணி சென்ற முன்னாள் எம்எல்ஏ சந்திர சேகர் தலைமையிலான 110 பேர், திருச்சி மரக்கடை அருகில் எம்ஜிஆர் சிலை முன் திரண்ட முன்னாள் எம்எல்ஏ சவுந்தரராஜன் உள்ளிட்ட 105 பேர் கைது செய்யப் பட்டனர். முசிறியில் முன்னாள் எம்எல்ஏ பிரின்ஸ் தங்கவேலு தலை மையில் 150 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் பேரணி செல்ல முயன்றபோது தடுத்ததால் சாலை மறியலில் ஈடுபட்ட முன்னாள் பேரூராட்சித் தலைவர் கருணாநிதி உள்ளிட்ட 60 பேரை போலீஸார் கைது செய்தனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம், மயிலாடுதுறை, செம்பனார்கோவில், சீர்காழி ஆகிய இடங்களில் தடையை மீறி பேரணி செல்ல முயன்ற முன்னாள் எம்எல்ஏக்கள் ரங்கநாதன், விஜய பாலன், சந்திரமோகன் உட்பட 453 பேர் கைது செய்யப்பட்டனர். நாகப்பட்டினத்தில் முன்னாள் அமைச்சர் ஜீவானந்தம் தலைமை யில் பேரணி செல்ல முயன்ற 500 பேர் தடுத்து நிறுத்தப்பட்டனர்.