Published : 20 Nov 2014 10:10 AM
Last Updated : 20 Nov 2014 10:10 AM

தருமபுரியில் குழந்தைகள் இறப்பு: டாக்டர்கள் சங்கம் விளக்கம்

தருமபுரி அரசு மருத்துவமனையில் உயிரிழந்த குழந்தைகள் அனைத்தும் இயற்கையாகவே மரணம் அடைந்துள்ளன என தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் டாக்டர் கே.செந்தில், மாநில செயலாளர் டாக்டர் பி.பாலகிருஷ்ணன் ஆகியோர் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக அவர்கள், சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் நேற்று அளித்த பேட்டி:

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 11 குழந்தைகள் உயிரிழந்தது பற்றி தவறான தகவல் பரப்பப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். இந்த மருத்துவமனையில் டாக்டர்கள், நர்ஸ்கள், பணியாளர்கள் போதுமான அளவு இருக்கின்றனர். சிறப்பான முறையில் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. உயிரிழந்த குழந்தைகள் அனைத்தும், இயற்கையாகவே மரணம் அடைந்துள்ளன.

20 ஆயிரம் குழந்தைகள் மரணம்:

தமிழகத்தில் ஆண்டு தோறும் பிறந்து ஒரு மாதத்திற்குள் 20 ஆயிரம் குழந்தைகள் இயற்கையாக உயிரிழக்கின்றன. ஒரு வயதுக்குள் சுமார் 30 ஆயிரம் குழந்தைகள் இயற்கையாக இறக்கிறது. இது ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாக நடந்து வருகிறது. மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் நேற்றுக்கூட இயற்கையாக 6 குழந்தைகள் உயிரிழந்துள்ளது. இந்திய அளவில் பார்க்கும் போது, தமிழகத்தில் பச்சிளம் குழந்தைகளின் இறப்பு சதவீதம் குறைவாகவே உள்ளது.

தமிழக அரசு மருத்துவமனைகளில் மகப்பேறு மருத்துவர், குழந்தைகள் மருத்துவர் என சிறப்பு மருத்துவர் காலியிடங்கள் 1,200 உள்ளது. இந்த காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x