

நம் முன் இருக்கும் வாய்ப்புகளை இளைய தலைமுறையினர் பயன் படுத்தி, நாட்டின் வளர்ச்சிக்காக தங்களை அர்ப்பணித்துக்கொள்ள வேண்டும் என தமிழக ஆளுநர் சி.எச்.வித்யாசாகர் ராவ் தன் குடியரசு தின செய்தியில் தெரிவித்துள்ளார்.
தமிழக பொறுப்பு ஆளுநராக உள்ள சி.எச்.வித்யாசாகர் ராவ், நேற்று மகாராஷ்டிராவில் குடியரசு தின விழாவில் பங்கேற்றார். இதை யடுத்து, அவர் நேற்று காலையில் தமிழக மக்களிடையே வானொலி மற்றும் தூர்தர்ஷன் தொலைக் காட்சியில் உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:
ஒவ்வொரு குடிமகனும் இந்த நாட்டில் பிறந்ததற்காக பெருமை கொள்ள வேண்டும். ஒவ்வொரு வரும் நாட்டுக்காக தங்களை அர்ப் பணித்துக்கொள்ள வேண்டும். அதற் கான வாய்ப்புகள் தற்போது அதிகளவில் உள்ளன. இந்த வாய்ப்புகளை இளைய தலைமுறை யினர் பயன்படுத்திக்கொள்ள வேண் டும். உலக நாடுகளில் இந்தியா முதன்மையான இடத்துக்கு செல்ல உங்களின் பங்களிப்பும், அர்ப்பணிப்பும் உதவும்.
சிறந்த விடுதலைப் போராட்ட வீரர்கள், தமிழ் அறிஞர்களுக்கு நினைவு இல்லங்களை தமிழக அரசு அமைத்துள்ளது. இது, அவர்களது தியாகத்தை தெரிந்துகொள்வதற்கு மட்டுமின்றி, இளைஞர்கள் மத்தி யில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உதவுகிறது. சிறந்த மற்றும் தரமான கல்வியின் மூலம் தமிழகம் அறியப்படுகிறது. தமிழகத்தில் தொடக்கக் கல்வி பெற்றவர்கள் எண்ணிக்கை கடந்த 2015-16-ல் 99.85 சதவீதமாக இருந்தது. தமிழகத் தில் உயர்கல்வி சேர்க்கை தேசிய சராசரியான 23.6 சதவீதத்தை விட அதிகமாக 44.8 சதவீதமாக உள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஏழை மக்களிடம் தாயைப் போல் அன்பு காட்டினார். பல்வேறு மக்கள் நலத்திட்டங்களையும் அவர் செயல் படுத்தி, மாநிலத்தை முதன்மை இடத்துக்கு கொண்டு சென்றுள்ளார். அம்மா உணவகம், சிமென்ட், உப்பு ஆகியவை ஏழை மக்களுக்கு உதவும் வகையில் உள்ளன. அம்மா உணவகங்களை பல்வேறு மாநிலங்கள், நாடுகள் பின்பற்றி வருகின்றன. பொதுமக்களுக்கு இலவச சேவை வழங்கும் இ-சேவை மையங்களும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.
இந்த நேரத்தில், முன்னோர் களின் கனவை நனவாக்க நாட்டின் வளர்ச்சிக்காக நம்மை தியாகம் செய்ய உறுதியேற்போம்.