ரூ.8 கோடி சட்டவிரோத பணப்பரிமாற்றம்: சேகர் ரெட்டி உள்ளிட்ட 3 பேரை 2 நாள் காவலில் விசாரிக்க அனுமதி - சிபிஐ நீதிமன்றம் உத்தரவு

ரூ.8 கோடி சட்டவிரோத பணப்பரிமாற்றம்: சேகர் ரெட்டி உள்ளிட்ட 3 பேரை 2 நாள் காவலில் விசாரிக்க அனுமதி - சிபிஐ நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

ரூ.8 கோடிக்கு புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டு களைப் பெற்று சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட சேகர் ரெட்டி, ஆடிட்டர் பிரேம்குமார், சீனிவாசலு ஆகிய 3 பேரையும் 2 நாள் சிபிஐ காவலில் விசாரிக்க அனுமதி அளித்து சிபிஐ நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

சென்னை தி.நகர் தொழிலதிபர் சேகர் ரெட்டியின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் கடந்த டிச.8-ம் தேதி சோதனை நடத்தினர். இதில் சேகர் ரெட்டிக்கு சொந்தமான வேலூரில் உள்ள வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் இருந்து ரூ.24 கோடிக்கு புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டன.

இது தொடர்பாக சேகர் ரெட்டி, ஆடிட்டர் பிரேம்குமார், உறவினர் சீனிவாசலு மற்றும் சேகர் ரெட்டியின் கூட்டாளிகளான திண்டுக்கல் ரத்தினம், முத்துப்பட் டிணம் ராமச்சந்திரன் ஆகி யோரை சிபிஐ கைது செய்து முதல் வழக்கைப் பதிவு செய்தது.

ரூ.8 கோடி ரொக்கம்

தவிர தி.நகரில் உள்ள சேகர் ரெட்டியின் வீட்டிலிருந்து ரூ.8 கோடிக்கு புதிய இரண்டாயிரம் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக சேகர் ரெட்டி, ஆடிட்டர் பிரேம்குமார், சீனிவாசலு ஆகிய 3 பேர் மீது சிபிஐ 2-வது வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் 3 பேரும் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். இதுதவிர ரூ.1.75 கோடிக்கு புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றியதாக சேகர் ரெட்டி தரப்பினர் மீது 3-வது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜனவரி 6-ல் ஆஜர்

இந்நிலையில் 2-வது பதியப்பட்ட வழக்கில் சேகர் ரெட்டி உள்ளிட்ட 3 பேரையும் தங்களது காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க கோரி சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள 11-வது கூடுதல் சிபிஐ சிறப்பு நீதி மன்றத்தில் சிபிஐ, மனுதாக்கல் செய்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.வெங்கடசாமி, 3 பேரையும் 2 நாள் சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க அனுமதித்து நேற்று மாலை உத்தரவிட்டார். 3 பேரையும் ஜன.6-ம் தேதி மாலை நீதிமன்றத்தில் ஒப் படைக்க வேண்டும் என நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in