

‘தி இந்து’ குழுமம், தன்னார்வ அமைப்புகள் இணைந்து மயிலாப் பூர் நாகேஸ்வரராவ் பூங்காவில் புயலால் சேதமடைந்த மரங்களை சீரமைக்கும் பணி நேற்று நடை பெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
‘வார்தா’ புயலால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட் டங்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் ஆங்காங்கே சாய்ந்துள்ளன. குறிப்பாக, சென்னை மாநகரில் உள்ள முக்கிய பூங்காக்களில் ஆயிரக்கணக்கான மரங்கள் சாய்ந்துள்ளன. மரங் களை இழந்துள்ளதால், சென்னை மாநகரின் சுற்றுச்சூழல் பெரிய அளவில் பாதிக்க வாய்ப்புள்ளது.
இந்த பாதிப்புகளை குறைக் கும் வகையிலும், சாய்ந்துள்ள மரங் களை சீரமைக்கும் வகையிலும் ‘தி இந்து’ குழுமம், “பசுமை சென்னை” என்ற கருப்பொருளை உருவாக்கியுள்ளது. அதன் மூலம், நிழல் என்ற தன்னார்வ அமைப்புடன் இணைந்து, ‘தி இந்து’ சென்னை நண்பர்கள் குழு, சிடிசி ஐந்திணை அமைப்பு ஆகியவை கடந்த 3 வாரங்களாக வாரத்தின் இறுதி நாட்களில் பூங்காக்களில் விழுந்துள்ள மரங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் மயிலாப்பூரில் உள்ள நாகேஸ்வரராவ் பூங்காவில் விழுந்த மரங்கள் அகற்றப்பட்டன. உயிர்பெற வாய்ப்புள்ள மரங்களை மீண்டும் நடவு செய்வதற்கான பணிகளும் நேற்று நடைபெற்றன. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இதுதொடர்பாக நிழல் அமைப் பின் அறங்காவலர் ஷோபா மேனன் கூறியதாவது: வார்தா புயலால் ஆங்காங்கே ஆயிரக்கணக்கான மரங்கள் சாய்ந்துள்ளன. சாய்ந் துள்ள மரங்களை சீரமைக்கும் வகையில் வார இறுதி நாட்களில் பணியாற்றி வருகிறோம். தன் னார்வ தொண்டு நிறுவனங்களும், பூங்காங்களுக்கு வரும் பொது மக்களும் இதில் ஆர்வமாக பங்கேற்று வருகின்றனர்.
உயிர்பெற வாய்ப்புள்ள நூற் றுக்கணக்கான மரங்களை காண முடிகிறது. அந்த மரங்களை மீண்டும் நடவு செய்ய தேவையான பணிகளை மேற்கொள்கிறோம். கோட்டூர்புரம் பூங்காவில் ஒரு புறம் சாய்ந்திருந்த மரத்தை நிமிர்த்தி போதிய அளவில் மண் அணைத்ததால் தற்போது 70 மரங் கள் துளிர்விட்டுள்ளது மகிழ்ச்சி யாக இருக்கிறது. இதேபோல், பொது இடங்களில் பாதி அளவுக்கு சாய்ந்திருக்கும் மரங்களை நிமிர்த்தி பாதுகாக்கலாம். பனகல் பூங்காவில் நாளை (இன்று) மரங் களை சீரமைக்கும் பணிகளை மேற்கொள்கிறோம். ஆர்வமுள்ள தன்னார்வ தொண்டு அமைப்புகள், பொதுமக்கள் பங்கேற்கலாம்.