

தனது பிறந்த நாளில் 10 ஆயிரத் துக்கும் அதிகமான புத்தகங் களை பரிசளித்த திமுக தொண்டர் களுக்கு அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தொண்டர்க ளுக்கு அவர் நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
மார்ச் 1-ம் தேதி எனது பிறந்த நாளில் திமுக தொண்டர்களும், தமிழக மக்களும் காட்டிய அன்பும், வாழ்த்துகளும் மனதெல் லாம் புத்தெழுச்சியை மலரச் செய்துள்ளது. கொண்டாட்டங்கள் வேண்டாம் என வேண்டுகோள் விடுத்த என்னை அன்பு கொண் டாட்டங்களால் அள்ளியணைத்து திக்குமுக்காடச் செய்துவிட்டனர்.
அண்ணா நினைவிடத்துக்கு வந்தபோது அந்த காலை நேரத் திலேயே தொண்டர்கள் நிறைந் திருந்தனர். பெரியார் நினைவிடத் தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியும், கருஞ்சட்டைத் தோழர்களும் வாழ்த்தி அன் பைப் பரிமாறினர். எனது வேண்டுகோளை ஏற்று ஆடம்பர பேனர்களை தவிர்த்து கட்சியின் இரு வண்ணக் கொடியை பறக்கச் செய்திருந்தது மகிழ்வை ஏற்படுத்தியது.
பொதுச்செயலாளர் க.அன்பழ கனிடம் வாழ்த்து பெற்றபோது, என் தோளில் ஏற்றப்பட்டுள்ள சுமையையும், அதனை சுகமாக எண்ணிப் பயணிக்க வேண்டிய லட்சியப் பாதையையும் உணர்ந் தேன். அண்ணா அறிவாலயம் வந்தபோது வங்கக் கடல் இடம் பெயர்ந்துவிட்டதோ என நினைக் கும் வகையில் தொண்டர்கள் திரண்டிருந்தனர். அவர்களின் பேரார்வமும், உணர்ச்சி முழக்க மும் என்னை வரவேற்றன.
திமுக தலைவர் கருணாநிதியை கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றேன். உடல்நலக் குறைவால் அதிகம் பேசவில்லை என்றாலும் இன்முகத்துடன் அவர் சிந்திய புன்னகை ஒரு கோடி வாழ்த்துப் பூக்கள் ஒன்றாக திரண்டு என் மேல் கொட்டுவதைப் போல இருந்தது.
பயனற்றப் பொருட்களை தவிர்த்து புத்தகங்களைப் பரிசாக வழங்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தேன். அதை ஏற்று 10 ஆயிரத்துக்கும் அதிகமாக புத்தகங்கள் குவிந்தன. இவற்றில் சிலவற்றை எனது அறிவுத் தேட லுக்குப் பயன்படுத்திக் கொண்டு மிகுந்திருப்பதை நூலகங்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளேன். அண்ணா அறிவாலயத்தில் உள்ள நூலகம் முதல் பல்வேறு நூலகங் களுக்கு புத்தகங்களைப் பிரித்து அனுப்பும் பணி தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் உள்ள பினாமி ஆட்சியை மக்கள் ஆதரவுடன் அகற்ற என் பிறந்த நாளில் தொண்டர்கள் அளித்த ஆதரவு பெரும் ஊக்கத்தை அளித்துள்ளது. பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் என் இதய நன் றியை காணிக்கையாக்குகிறேன். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.