Published : 02 Apr 2017 09:40 AM
Last Updated : 02 Apr 2017 09:40 AM

போலி ஆவணங்கள் தயாரித்து மோசடி செய்த 8 பேர் கைது

புதுச்சேரியில் போலி ஆவணங்கள் தயாரித்து மோசடியில் ஈடுபட்டு வந்த 8 பேரை போலீஸார் கைது செய்தனர்.

புதுச்சேரி காந்தி வீதி - ரங்கப் பிள்ளை வீதி சந்திப்பில் தட்டச்சு பயிலகத்தில் போலி ஆவணங்கள் தயாரித்து மோசடியில் ஈடுபட்டு வருவதாக பெரியக்கடை போலீஸா ருக்கு ரகசிய தகவல் கிடைத் தது. அதன்பேரில், இன்ஸ்பெக் டர் செல்வன், சிறப்பு அதிரடிப் படை இன்ஸ்பெக்டர் கார்த்தி கேயன், பெரியக்கடை சப்- இன்ஸ் பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீஸார் சாதாராண உடையில் சான்றிதழ் வாங்குவதுபோல் சம்பந் தப்பட்ட கடைக்குச் சென்றனர். சான்றிதழ் வாங்குவதுபோல் அங்கிருந்தவர்களிடம் பேசி தகவல் அறிந்தனர்.

பின்னர் அதிரடியாக அங்கு சோதனை மேற்கொண்டனர். அப் போது, அங்கு போலி ஆதார் கார்டு, சொத்து பத்திரங்கள், எம்பிபிஎஸ், பிளஸ் 2 மதிப்பெண் சான்று, பிறப்பு, இறப்பு சான்று, நீதிமன்ற தீர்ப்பு நகல் உள்ளிட்டவற்றை போலி யாக தயாரிப்பது தெரியவந்தது.

பறிமுதல்

இதையடுத்து அந்த தட்டச்சு பயிலகத்தில் இருந்து போலி பத் திரங்கள் தயாரிக்க பயன்படுத்திய கம்ப்யூட்டர், ஸ்கேனர், ரப்பர் ஸ்டாம்புகள், லேப்டாப் போன்ற வற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

மேலும், தட்டச்சு பயிலகத்தை நடத்தி வரும் அரும்பார்த்தபுரம் ஜி.என்.பாளையம் ஆயில்மில் ரோடு பகுதியைச் சேர்ந்த செந்தூர் சாமி(53) என்பவரை போலீஸார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக போலி ஆவணங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வருவதும், அதற்கு 7 பேர் உடந் தையாக இருந்து வருவதும் தெரிய வந்தது.

இதையடுத்து செந்தூர்சாமி கொடுத்த தகவலின்பேரில் முத்தி யால்பேட்டை சுப்பிரமணி(40), குறிஞ்சி நகர் டேனியல்(53), சுல்தான்பேட் ராஜலிங்கம்(41), உழவர்கரை மோகன்(36), லாஸ் பேட்டை ஐய்யப்பன் (எ) மணிகண் டன்(39), பிரான்சிஸ்(54), திலாசுப் பேட்டை சுந்தரலிங்கம் (எ) தக்காளி சுந்தர்(42) ஆகியோரை போலீஸார் கைது செய்து செய்தனர்.

இதுகுறித்து சீனியர் எஸ்பி ராஜிவ் ரஞ்சன் கூறும்போது, ‘‘போலி ஆவணங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வந்த இந்த 8 பேரும், பல்லாயிரக்கணக்கான சொத்து பத்திரங்கள், உயர் நீதிமன்ற தீர்ப்பு ஆவணம் உள்ளிட்ட நீதிமன்ற ஆவணங்கள், பிறப்பு, இறப்பு சான்றுகள், எம்பிபிஎஸ் சான்று உள்ளிட்ட கல்வி சான்றுகள் தயாரித்து விற்பனை செய்து வந் துள்ளனர். மேலும், வெளிநாடு களில் வாழும் புதுச்சேரியைச் சேர்ந்தவர்களின் சொத்துகளை போலி பத்திரங்கள் தயாரித்து அபகரிப்பது, மிரட்டி பணம் பறிப்ப திலும் ஈடுபட்டு வந்துள்ளனர்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x