Published : 04 Feb 2014 09:22 am

Updated : 06 Jun 2017 19:08 pm

 

Published : 04 Feb 2014 09:22 AM
Last Updated : 06 Jun 2017 07:08 PM

தன் குடும்பத்துக்கு ஒரு நீதி; மற்றவர்களுக்கு ஒரு நீதியா?- கருணாநிதிக்கு ஜெயலலிதா கேள்வி

தன் மகன் ஸ்டாலினுக்கு ஆபத்து என்றதும் பிரதமருக்கு கடிதம் எழுதச் சொல்லும் கருணாநிதி, பத்திரிகை எரிப்பு மற்றும் தா.கிருட்டிணன் கொலை வழக்குகளில் என்ன நிலைப்பாட்டை எடுத்தார் என்று முதல்வர் ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார்.

சட்டப்பேரவையில் ஆளுநர உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத் துக்கு பதிலளித்து திங்கள்கிழமை முதல்வர் ஜெயலலிதா பேசிய தாவது:


மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை, குற்றங்கள் அதிகரித் துள்ளன என்று உண்மைக்கு மாறான பிரச்சாரம் திமுகவினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முந்தைய திமுக ஆட்சியில், மதுரையில் பத்திரிகை அலுவலகம் எரிக்கப்பட்டது. அந்தக் கொடூரக் காட்சிகள், தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாயின. அதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? குற்ற வாளிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். இதுதான் சட்டத்தையும், நீதியையும் நிலைநாட்டிய லட்சணமா?

சென்னை சட்டக் கல்லூரி வளாகத்தில் இரு பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதைத் தடுக்க வேண்டிய காவல் துறையின் கைகளை கட்டிப் போட்டது யார்? இதுபோன்ற எண்ணற்ற குற்றச்சாட்டுகளை அடுக்கிக் கொண்டே போகலாம். அப்போது சட்டத்தின் ஆட்சிக்கு பதிலாக சமூக விரோதிகளுக்கான ஆட்சிதான் நடந்தது. இப்போது ஆட்சியில் இல்லாதபோதும் சட்டத் துக்கு விரோதமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் கருணாநிதி.

மதுரை புறநகர் மாவட்ட திமுக செயலாளர் உள்பட ஐந்து பேர் மீது ஒருவர் தீண்டாமை வன் கொடுமைச் சட்டத்தின் கீழ் காவல் துறையிடம் புகார் கொடுத்தார். அதன் உண்மைத் தன்மையை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டியது காவல் துறை. ஆனால், கருணாநிதியோ, சட்டத் துக்கு புறம்பாக செயல்பட்டவர் மீது காவல் துறையில் புகார் கொடுப்பதே தவறு என்று கூறி இருக்கிறார்.

மதுரை பத்திரிகை அலுவலக எரிப்புச் சம்பவத்துக்கும், தா.கிருட்டிணன் கொலை வழக்குக் கும் மூல காரணம் யார் என்பதை நான் சொல்லி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசிய மில்லை. இரண்டு சம்பவங்களும் தானாகவே நடந்ததுபோல், இந்த வழக்குகளில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

தற்போது, தனது இளைய மகன் மு.க.ஸ்டாலின் வாழ்வு பற்றி நாடாளுமன்ற உறுப்பினர் அழகிரி சொல்லியதை பத்திரிகையாளர் களிடம் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

அதோடு நின்றுவிடாமல், பிரதமருக்கு டி.ஆர். பாலு மூலம் கடிதம் எழுதச் சொல்லியிருக்கிறார். அந்தக் கடிதத்தில், எல்.டி.டி.ஈ., மத அடிப்படைவாதிகள் மற்றும் அரசியல் விரோதிகளால் ஸ்டாலி னுக்கு ஆபத்து உள்ளது என்று குறிப்பிட்டு, ‘இசட் பிளஸ்’ பாது காப்பு கேட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

இலங்கை இனப்படுகொலை யில் தமிழ் ஈழ விடுதலை அமைப் பினர் மட்டுமல்லாமல், பல்லாயிரக் கணக்கான இலங்கைத் தமிழர்கள் கொல்லப்பட்டுவிட்ட நிலையில், எல்.டி.டி.ஈ. அமைப்பிடமிருந்து ஆபத்து என்பது இல்லாத ஒன்றா கும். எந்த ஒரு பெயரும் குறிப் பிடாமல், மத அடிப்படைவாதிக ளிடம் இருந்து அச்சுறுத்தல் இருப் பதாக கூறப்பட்டுள்ளது.

இதுவும் கற்பனையான ஒன்று. கடைசியாக, அரசியல் விரோதிகளிடமிருந்து அச் சுறுத்தல் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. யார் அந்த அரசியல் விரோதி கள் என்பது குறிப்பிடவில்லை. கடிதம் எழுதியுள்ள தருணத்தை யும், தற்போது கருணாநிதி குடும்பத்தில் நடக்கும் குழப்பத்தையும் ஒப்பிடுகையில் மு.க.அழகிரியின் மூலம் ஆபத்து என்பது மறைமுகமாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

தனது இளைய மகனுக்கு மூத்த மகனால் ஆபத்து என்றவுடன் பிரதமருக்கு வரிந்து கட்டிக் கொண்டு கடிதம் எழுதச் சொல்லும் கருணாநிதி, பத்திரிகை எரிப்புச் சம்பவம் மற்றும் தா.கிருட்டிணன் கொலை வழக்குகளில் என்ன நிலைப்பாட்டை எடுத்தார்? தனக்கு ஒரு நீதி; தன் குடும்பத்துக்கு ஒரு நீதி; மற்றவர்களுக்கு ஒரு நீதி என்ற ரீதியில் செயல்படும் கருணாநிதியை தலைவராகக் கொண்டு செயல்படும் திமுகவினர், சட்டம்-ஒழுங்கு குறித்து பேசுவது நகைப்புக்குரியதாக உள்ளது.

எங்களைப் பொறுத்தவரை சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்பட்டு வருகிறோம். தமிழகத்தில் பொது அமைதி சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.


தமிழக சட்டமன்றம்ஜெயலலிதாகருணாநிதிகருணாநிதிக்கு கேள்வி

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x