தமிழகம் முழுவதும் கருவேல மரங்களை அழிக்க சரியான தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும்: தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழகம் முழுவதும் கருவேல மரங்களை அழிக்க சரியான தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும்: தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
Updated on
1 min read

கருவேல மரங்களை அழிக்க சரியான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று பாமக இளைஞர் அணித் தலை வர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சுற்றுச்சூழலுக்கும், விவ சாயத்துக்கும் மிகப்பெரிய எதிரியான சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என மதுரை உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவற்றை அகற்றும் பணிகள் காவிரி பாசன மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. மாண வர்கள், இளைஞர்கள் என சமு தாயத்தின் அனைத்து தரப்பினரும் எந்த பயனையும் எதிர்பாராமல் இந்தப் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

இந்தப் பணிகள் முழுமையாக வும், சீமைக் கருவேல மரங்கள் இனி எந்தக் காலத்திலும் துளிர்த்து வளர முடியாத அளவிலும் அழிக்கப்பட வேண்டும். அதற்கான வழிகாட்டுதலும், தொழில்நுட்பமும் மக்களுக்கு வழங்கப்பட வேண் டும். சீமைக் கருவேல மரங்க ளால் இயற்கைக்கும், சுற்றுச் சூழலுக்கும் ஏற்படும் பாதிப்புகள் கொஞ்ச நெஞ்சமல்ல. சீமைக் கருவேல மரங்கள் சுமார் 300 அடி ஆழத்துக்கும், 50 அடி அகலத்துக் கும் வேர்களைப் பரப்பக்கூடியவை. அவற்றின் மூலம் நிலத்தடி நீரை மிக அதிக அளவில் அவை உறிஞ்சுகின்றன.

ஒரு பகுதியில் சீமைக் கருவேல மரங்களின் வளர்ச்சியைக் கட்டுப் படுத்தவில்லை என்றால், அப்பகுதி பாலைவனமாகிவிடும் ஆபத்து உள்ளது. சீமைக் கருவேல மரங் களை பொக்லைன் இயந்திரங்கள் மூலம் வேருடன் பிடுங்கிவிட்டு, அந்த இடத்தில் வீட்சைடு எனப்படும் களைக்கொல்லியைத் தெளிப்பதன் மூலம் அந்த இடங்களில் மீண்டும் கருவேல மரங்கள் வளராது. அண்டை மாநிலமான கேரளத்தில் இம்முறையை பயன்படுத்தித்தான் சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டிருக்கின்றன.

தருமபுரி மக்களவைத் தொகு திக்கு உட்பட்ட கடத்தூர் கிராமத்தில் 15 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கும் ஏரியில் வளர்ந்திருந்த சீமைக் கருவேல மரங்களை இந்த முறையில்தான் நாங்கள் அகற்றியிருக்கிறோம். இதுபோன்ற பல தொழில்நுட்பங்களைப் பயன் படுத்துவதன் மூலம் கருவேல மரங்களை முழுமையாக அழிக்க முடியும்.

எனவே, இந்த தொழில்நுட்பங் களைப் பயன்படுத்தவும், சீமைக் கருவேல மரங்களை ஒழிக்கும் நடவடிக்கையை தமிழகம் முழுவதும் நீட்டிக்கவும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in