மன்றோ சிலை அருகே இளைஞர்களை வெட்டி நகைகள் பறிப்பு

மன்றோ சிலை அருகே இளைஞர்களை வெட்டி நகைகள் பறிப்பு
Updated on
1 min read

மன்றோ சிலை அருகே மோட்டார் சைக்கிளில் வந்த 2 இளைஞர்களை வெட்டி, மிளகாய் பொடி தூவி அவர்கள் அணிந்திருந்த 8 சவரன் நகைகளை 4 பேர் கொண்ட கும்பல் வழிப்பறி செய்தது.

சென்னை தி.நகரை சேர்ந்த கண்ணன் (35), திருவல்லிக்கேணியை சேர்ந்த ராமச் சந்திரன் (37) இருவரும் தி.நகரில் உள்ள ஒரு டிராவல்ஸ் நிறுவனத்தில் வேலை செய்கின்றனர். நிறுவன வேலை தொடர் பாக நேற்று முன்தினம் இரவில் இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் பாரிமுனை வந்தனர். வேலையை முடித்துவிட்டு மன்றோ சிலை வழியாக நள்ளிரவு ஒரு மணி யளவில் தி.நகருக்கு சென்று கொண்டிருந் தனர்.

அப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் அவர்களை பின்தொடர்ந்து வந்த 4 பேர் கண்ணன், ராமச்சந்திரன் வந்த மோட்டார் சைக்கிளை வழிமறித்து, அவர்களின் முகத்தில் மிளகாய் பொடியை வீசினர். கண் எரிச்சலில் தடுமாறிய கண்ணன், ராமச்சந்திரன் இருவரையும் அந்த கும்பல் சரமாரியாக தாக்கியது. ஒருவன் அரிவாளால் தாக்கியதில் ராமச்சந்திர னுக்கு தலையில் 4 வெட்டுகள் விழுந்தன. இதில் இருவரும் மயக்க நிலைக்கே சென்று விட்டனர்.

பின்னர் அந்த கும்பல் கண்ணன், ராமச் சந்திரன் அணிந்திருந்த செயின், பிரேஸ் லெட், 2 மோதிரங்கள் உட்பட 8 சவரன் நகைகளை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றது. மேலும் அவர்கள் ஒரு பையில் வைத்திருந்த 8 பாஸ்போர்ட்களையும் பிடுங்கிச் சென்றது. அந்த வழியாக சென்றவர்கள் இருவரையும் மீட்டு அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in