

‘ஷேஃப் இனிஷியேடிவ் மிஷன் சொசைட்டி’ அமைப்பின் நிறுவனர் டாக்டர் பிரசாத் மன்னேவிடம் பொதிகை தொலைக்காட்சி உதவி இயக்குநர் எஸ்.அனந்தநாராய ணன் நடத்திய நேர்காணல் தூர்தர்ஷன் பொதிகை தொலைக் காட்சியில் நாளை (செப். 17) காலை 7.30 மணிக்கு ‘நம் விருந்தினர்’ நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகிறது.
மக்களிடம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தி, நாட்டில் விபத்துகளின் எண்ணிக் கையை குறைக்க வேண்டும் என்ற நோக்கில் 2014-ல் தொடங் கப்பட்ட அமைப்புதான் ‘ஷேஃப் இனிஷியேடிவ் மிஷன் சொசைட்டி’. இந்த அமைப்பு தமிழக காவல், கல்வித் துறைகள் மற்றும் பல்வேறு அமைப்புகளோடு இணைந்து தமிழகம் முழுவதும் விபத்து குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. மாவட்டவாரியாக பல்வேறு வகை யான திட்டங்கள் மூலம் அரசின் ஒத்துழைப்புடன் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை இந்த அமைப்பு ஏற்படுத்தி வருகிறது. இந்த அமைப் பின் பணி மற்றும் அதுதொடர்பான விவரங்கள் முழுவதும் இந்த நேர்காணலில் இடம்பெறும்.
‘நம் விருந்தினர்’ நேர்காணல் நிகழ்ச்சியை வழங்கும் எஸ்.அனந்த நாராயணன், பொதிகை தொலைக் காட்சியில் மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக் கிழமை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி யின் ‘மன் கீ பாத்’ உரையின் தமிழ் வடிவத்துக்கு குரல் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.