செஞ்சிக்கோட்டையை பறந்தபடி பார்க்க பைலட் பலூன் சோதனை வெற்றி

செஞ்சிக்கோட்டையை பறந்தபடி பார்க்க பைலட் பலூன் சோதனை வெற்றி
Updated on
1 min read

செஞ்சிக்கோட்டையின் அழகை சுற்றுலாப் பயணிகள் ஆகாயத்தில் பறந்தபடி ரசித்துப் பார்க்க பைலட் பலூன் பயணத்தை சுற்றுலா வளர்ச்சித் துறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்கான சோதனை முயற்சி வெற்றியடைந்தது.

பலூனைப் பறக்கவைக்கும் சோதனை முயற்சி கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் செஞ்சி

யில் நடத்தப்பட்டது. சென்னை குளோபல் மீடியா பாக்ஸ் நிறுவனத் துடன் இணைந்து முதல்முறையாக இந்த முயற்சியைத் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சித் துறை மேற் கொண்டுள்ளது.

பிரமாண்ட செஞ்சிக்கோட் டையை கண்டு ரசிக்க உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகின்ற னர். எனினும் செஞ்சிக்கோட்டை முழுவதையும் அவர்களால் சுற்றிப் பார்க்க முடிவதில்லை. இதற்கு தீர்வு காணும் வகையிலும், சுற்று லாப் பயணிகளை வெகுவாக கவரும் வகையிலும் பைலட் பலூன் பயணத்தைத் தமிழக சுற்றுலாத்துறை அறிமுகப்படுத்த உள்ளது.

’ஆங்க்ரி பேர்டு’ வடிவில் பலூன்

தனியார் மெட்ரிக் பள்ளி ஒன்றின் மைதானத்தில் இருந்து ’ஆங்க்ரி பேர்டு' வடிவில் அமைக்கப் பட்டிருந்த இந்த பைலட் பலூனை அமெரிக்காவைச் சேர்ந்த பைலட் கேரிமோர் இயக்கினார். இந்திய பைலட் சையத்கரிமுல்லா, அமைப் பாளர்கள் பெனடிக்சாவியோ உள்ளிட்ட குழுவினர் உடனிருந்த னர்.

இதுகுறித்து குளோபல் மீடியா பாக்ஸ் நிறுவன அதிகாரிகள் கிருஸ்டோபர் பிரசாத் மற்றும் பெனடிக் சேவியோ கூறியதாவது:

தைவான், தாய்லாந்து, இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளில் இந்த பைலட் பலூன் பயணம் பாதுகாப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூர் கோட்டையிலும், மத்தியபிரதேசத் தில் பெஞ்ச் புலிகள் காப்பகத்திலும் இந்த பைலட் பலூன் பயணம் வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகிறது.முதல் முயற்சியாக தமிழகத்தில் இச்சோதனை நடத்தப்படுகிறது. செஞ்சியில் 2 நாள் பைலட் பலூனை இயக்கி பாதுகாப்பாக பயணத்தை உறுதி செய்துள்ளோம். பொள்ளாச்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆனமலை அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் இந்த சோதனை வெற்றிகரமாக நடத்தப் பட்டது. இந்தவகை பலூன்கள் பாதுகாப்பானது.உலக அளவில் இதை உறுதிசெய்துள்ளனர்.

வருகின்ற பொங்கல் நாளில் இந்த பைலட் பலூனை பயன் பாட்டுக்குக் கொண்டு வர முடிவு செய்துள்ளோம். பெரிய பலூனில் 6 பேர் முதல் 8 பேர் வரை செல்லலாம். சுமார் ஒரு மணி நேரம் இந்த பலூன் பறக்கும் என்று தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in