

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தவர்கள் செலுத்திய ரூ.400 கோடி வைப்புத் தொகையை (டெபாசிட்) திரும்ப வழங்கக் கோரிய வழக்கில் மாநில தேர்தல் ஆணையம் பதில ளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது. பணம் செலுத்தியவர் களுக்கு இம்மாத இறுதிக்குள் பணம் திரும்ப வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக் கோட்டை அருகே உள்ள பில்லன் குழியைச் சேர்ந்த எஸ்.கார்திக், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், “தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளி யிட்டது. இதையடுத்து மாநகராட்சி, நகராட்சி, மாவட்ட ஊராட்சி உள்ளிட்ட அனைத்து உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிடுவதற்காக லட்சக்கணக்கானோர் வைப்புத் தொகையுடன் வேட்புமனு தாக்கல் செய்தனர். இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தலை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்தவர்களுக்கு அவர்கள் செலுத்திய வைப்புத் தொகை இதுவரை திரும்ப வழங்கப்படவில்லை. இவ்வாறு தமிழகம் முழு வதும் 12,620 கிராம ஊராட்சி, 528 பேரூராட்சி, 368 ஊராட்சி ஒன்றியங்கள், 124 நகராட்சிகள், 12 மாநகராட்சிகள் உள்ளிட்ட அனைத்து உள்ளாட்சி அமைப்பு களிலும் 1,31,794 உறுப்பினர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு போட்டி யிட வேட்புமனு தாக்கல் செய்தவர் களால் தேர்தல் ஆணையத்தில் ரூ.400 கோடிக்கு மேல் வைப்புத் தொகை செலுத்தப்பட்டு இன்னும் திரும்ப வழங்கப்படாமல் உள்ளது. எனவே உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வைப்புத் தொகை செலுத்திய அனைவருக்கும் வைப் புத் தொகையை திரும்ப வழங்க உத்தரவிட வேண்டும்” என கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் ஏ.செல்வம், என்.ஆதிநாதன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மாநில தேர்தல் ஆணைய வழக்கறிஞர் வாதிடும்போது, “வேட்புமனு தாக்கல் செய்தவர்களின் வைப்புத் தொகையை திரும்ப வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏப். 30-க்குள் வைப்புத் தொகை திரும்ப வழங்கப்படும்” என்றார். இதையடுத்து மாநில தேர் தல் ஆணையம் பதில் அளிக்க உத்தரவிட்டு, அடுத்த விசார ணையை ஜூலை 19-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.