

சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த வர் செல்வம். மாற்றுத்திற னாளியான இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘‘ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது சென்னை முழுவதும் கடந்த 23-ம் தேதி வன்முறை ஏற்பட்டது. அரும்பாக் கம் போலீஸார் என்னுடைய மகனையும் தேடி வீட்டுக்கு வந்த னர். அவன் வீட்டில் இல்லாததால் என்னை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று சித்ரவதை செய்தனர்.
தந்தைக்கு மிரட்டல்
என் மகன் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறான். கலவரம் நடந்தபோது அவன் என்சிசி பயிற்சி முகாமில் இருந்தான். அவன் படிக்கும் கல்லூரியின் முதல்வர் மற்றும் என்சிசி ஆசிரியர் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று என் மகன் பயிற்சி முகாமில் இருப்பதைக் கூறியும் போலீஸார் ஏற்கவில்லை. பின்னர் என்னை வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டு, மறுநாளும் ஸ்டேஷ னுக்கு வருமாறு கூறி மிரட்டு கின்றனர். எனவே, என்னை போலீ ஸார் தொந்தரவு செய்யக்கூடாது என உத்தரவிட வேண்டும்” என கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன், ‘‘குற்றம் செய்தவர்கள் மீது தான் போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, குற்றம்சாட்டப்பட்டவரின் உறவினர்களை இதுபோல் தொந்தரவு செய்வதை ஏற்க முடியாது. எனவே மனுதாரரை அரும்பாக்கம் போலீஸார் தொந்தரவு செய்யக்கூடாது” என போலீஸாருக்கு உத்தரவிட்டார்.
மாணவன் படிக்கும் கல்லூரியின் முதல்வர், என்சிசி ஆசிரியர் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று கலவரம் நடந்தபோது மாணவன் பயிற்சி முகாமில் இருப்பதைக் கூறியும் போலீஸார் ஏற்கவில்லை.