Published : 04 Feb 2014 12:00 AM
Last Updated : 04 Feb 2014 12:00 AM

தமிழகத்தில் இன்று முதல் பால் உற்பத்தி நிறுத்தப் போராட்டம்: பால் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கம் சார்பில் தமிழகம் முழு வதும் இன்றுமுதல் பால் நிறுத்தப் போராட்டம் நடக்கிறது.

இதனால் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் வரத்து குறையும் என தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கத் தலைவர் கே.ஏ.செங்கோட்டுவேல் தெரிவித்தார்.

கோமாரி நோயால் இறந்த மாடுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், ஒரு லிட்டர் பாலுக்கு ரூ.5 ஊக்கத் தொகையாக வழங்க வேண்டும், சங்க நிர்வாக செலவினத்திற்கு 5 சதவீதம் நிதி ஒதுக்க வேண்டும் என தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தினர் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதுதொடர் பாக வரும் 3ம் தேதிக்குள் அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும், இல்லாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தனர்.

ஆனால், இதுசம்பந்தமாக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதையடுத்து இன்று (பிப். 4) முதல் பால் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் வழங்குவதை நிறுத்த உள்ளதாக அறிவித்துள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கத் தலைவர் கே.ஏ.செங்கோட்டுவேல் சேலத்தில் நிருபர்களிடம் கூறியது:

தமிழக அரசு ஒரு லிட்டர் பாலுக்கு ரூ.3 உயர்த்தியது. இது வெறும் 15 சதவீ்தம் மட்டுமேயாகும். இவ்விலை உயர்வு கட்டுப்பாடியாகாது. பால் உற்பத்தி செலவு லிட்டருக்கு ரூ.34 ஆகிறது. தமிழகத்தில் கோமாரி நோயால் 30 ஆயிரம் மாடுகள் இறந்துள்ளுன. அதற்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும்.

தமிழகத்தில் மொத்தம் 8,200 பால் சங்கங்கள் செயல்படுகின்றன. அவற்றில் 5 ஆயிரம் சங்கங் களில் நாளொன்றுக்கு 200, 100 லிட்டருக்கும் குறைவாக பால் சேகரமாகிறது.

இதில் நிர்வாக செலவுக்கு 50 பைசா வழங்கப்படுகிது. 100 லிட்டர் பால் வாங்கும் சங்கத்துக்கு மாதம் ரூ.1,500 வருவாய் கிடைக்கிறது. இதை வைத்து நிர்வாக செலவு செய்ய முடியவில்லை. மேலும், பணியாளர்களுக்கும் ஊதிய உயர்வு வழங்க முடிவதில்லை. எனவே ஒரு லிட்டர் பாலுக்கு ரூ.1.15 வழங்கி நேரடியாக பால் கொள்முதல் விலை பட்டியல் அறிவிக்க வேண்டும்.

காலவரையற்ற போராட்டம்

அண்டை மாநிலங்களைப் போல் தமிழகத்தில் கூட்டுறவு சங்களுக்கு வழங்கும் பாலுக்கு லிட்டர் ஒன்றுக்கு ரூ.5 ஊக்கத் தொகை வழங்க வேண்டும் என அரசிடம் கோரிக்கை விடுத்தோம். ஆனால் அரசு சிறிதளவு பால் விலையை அறிவித்து விட்டு பிற கோரிக்கையை நிறைவேற்றித் தரவில்லை.

எனவே திட்டமிட்டபடி செவ்வாய்க்கிழமை (பிப். 4) முதல் தமிழகம் தழுவிய அளவில் பால் உற்பத்தி நிறுத்தப் போராட்டமும், கால்நடைகளுடன் சாலை மறியல் போராட்டமும் காலவரையற்ற வகையில் நடத்தப்படுகிறது. இதனால் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் வரத்து குறையும்.

கட்சிகள் ஆதரவு

போராட்டத்துக்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, பாமக உள் ளிட்ட ஒரு சில அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. அதே போல் அனைத்து விவசாய சங்கங்களும் ஆதரவு தெரிவித் துள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x