

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அன்புமணி ராமதாஸ் போட்டியிடப்போவதில்லை என்பது உறுதியாகியுள்ளது.
பாமகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வருகின்ற 21ந்தேதி வெளியிடப்படும் என டாக்டர் ராமதாஸ் வியாழக்கிழமை தெரிவித்திருந்தார்.
மாநிலங்களவை எம்பியாக தேர்வு செய்யப்பட்ட அன்புமணி ராமதாஸ் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தார். பின்னர் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தால் திமுக கூட்டணியிலிருந்து பாமக விலகியது. எந்த திராவிட, தேசிய கட்சிகளுடனும் கூட்டணி இல்லை என அறிவித்தது.
இந்நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பாகவே பா.ம.க. நாடாளுமன்ற தேர்த லுக்கான பணிகளை துவக்கிவிட்டது. தர்மபுரி அல்லது ஆரணி தொகுதியில் அன்புமணி போட்டியிடுவார் என பாமக நிர்வாகிகள் கூறிவந்தனர். அதற்கேற்றாற் போல கட்சி யினருக்கு அரசியல் பயிலரங்கங்கள் நடத்தப்பட்டன.
நாடாளுமன்ற தேர்தலில் தனித்தே போட்டியிடுவது என முடிவுக்கு வந்த பாமக வட மாவட்ட மக்களின் மனநிலையை அறிய சர்வே செய்தது. இத்தேர்தலில் அன்புமணி போட்டி யிட்டு ஒருவேளை தோல்வியை தழுவினால், கட்சியின் இமேஜ் சரிந்துவிடும். அதேநேரம், கூட்டணி இல்லாமல் எந்த திட்டத்தையும் செயல்படுத்த முடியாது என்ற நிலையில், தேர்தல் களத்தில் இறங்கும் அன்புமணியின் முயற்சி நிறுத்தப்பட்டது.
இதனிடையே, தமிழக சட்டமன்ற தேர்தலில் அனைத்து சாதி சங்கங்களையும் ஒருங்கிணைத்து தனது தலைமையில் ஒரு அணி யாக போட்டியிடத் திட்டம் தீட்டி வருகிறது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாமக தனித்து போட்டி யிடுவது சொந்த பலத்தை அறியும் முயற்சிதான் என தெரிகிறது.
எனவே வரும் நாடாளுமன்ற தேர்தல் பாமகவை பொருத்தவரை ஒத்திகைதான்.