

கடந்த 8 ஆண்டுகளாக கரூர் மக்க ளவை தொகுதிக்கு மக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரை எதுவுமே செய்யவில்லை என அரவக்குறிச்சி எம்எல்ஏ செந்தில் பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் கரூரில் செய்தி யாளர்களிடம் நேற்று கூறியதாவது:
கரூர் மாவட்டத்தில் அரசு மருத் துவக் கல்லூரி அமைக்கப்படும் என கடந்த 2014 ஆகஸ்ட் 12-ம் தேதி அப்போதைய முதல்வர் ஜெயலலிதா 110- விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்டார். இதற்காக வாங்கல் குப்புச்சிபாளையத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டு அரசா ணையும் வெளியிடப்பட்டது. 2016 மார்ச் 1-ல் அடிக்கல் நாட்டப்பட்டது.
ஆனால், மக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரை, போக்கு வரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் சணப்பிரட்டியில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க தேர்வு செய் துள்ள இடம் 15.28 ஏக்கர் மட்டுமே உள்ளது. ரூ.10.65 கோடியை நகராட்சிக்கு, சுகாதாரத் துறை செலுத்தினால் மட்டுமே இந்த நிலத்தை பெற முடியும். மேலும், போதுமான சாலை வசதி இல்லாததால் போக்குவரத்து நெருக்கடி எழும் வாய்ப்பு உள்ளது.
வாங்கல் குப்புச்சிபாளையத்தில் 25.63 ஏக்கர் நிலம் வழங்கியவர்கள் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அரசு மருத்துவக் கல் லூரியை சணப்பிரட்டிக்கு மாற்றக் கூடாது என தடையாணை பெற்று, வழக்கு நிலுவையில் உள்ளது. இதனால், வாங்கல் குப்புச்சிபாளை யத்தில் பணிகள் தொடங்க நீதிமன்றத்தில் தடை இல்லை.
இதுதொடர்பாக முதல்வர் பழனிசாமியிடம் வலியுறுத்தி யுள்ளேன். உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித் துள்ளார். எனவே, வரும் 27-ம் தேதிக் குள் வாங்கல் குப்புச்சிபாளை யத்தில் அரசு மருத்துவக் கல்லூரி பணிகளை தொடங்கவில்லை என் றால், வரும் 28-ம் தேதி கரூர் வட் டாட்சியர் அலுவலகம் முன் பொது மக்கள் சார்பில் உண்ணாவிரதம் நடைபெறும். கரூர் தொகுதி வாக்கா ளர் என்ற முறையில் நான் அதில் பங்கேற்கிறேன். அனுமதி வழங்காவிட்டாலும் உண்ணாவிர தம் நடைபெறும்.
மக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரை கடந்த 8 ஆண்டு களாக கரூர் மக்களவை தொகுதிக்கு எதுவுமே செய்யவில்லை. அவரும் எந்தத் திட்டத்தையும் செய்யமாட் டார், அடுத்தவர்கள் கொண்டுவரும் திட்டத்தையும் செயல்படுத்த விட மாட்டார்.
நான் உட்பட 122 எம்எல்ஏக்கள் வாக்களித்ததால்தான், போக்கு வரத்துத் துறை அமைச்சர், முதல் வர் உள்ளிட்டோர் அப்பதவிகளில் உள்ளனர். கட்சியில் டி.டி.வி.தின கரன் மீதான நடவடிக்கை, 2 அணிகள் இணைவது குறித்து என்னிடம் யாரும் தெரிவிக்கவில்லை. ஆனால், 2 அணிகளும் இணைத்து ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்பதே விருப்பம் என்றார்.