

அரசு சட்டக் கல்லூரிகளில் 5 ஆண்டு சட்டப் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் மற்றும் கட் ஆஃப் மதிப்பெண் நேற்று வெளியிடப்பட்டது. கலந்தாய்வு ஜூலை 21-ம் தேதி தொடங்குகிறது.
தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, வேலூர், செங்கல்பட்டு, திருநெல்வேலி ஆகிய 7 இடங்களில் அரசு சட்டக் கல்லூரிகள் செயல்படு கின்றன. இவற்றில் ஐந்தாண்டு பிஏ.எல்எல்பி. படிப்பில் 1,052 இடங்கள் உள்ளன. இவற்றுக்கு விண் ணப்பித்த மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் மற்றும் கட் ஆஃப் மதிப்பெண் சென்னையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் நேற்று வெளியிடப்பட்டது. இந்த விவரங்களை சட்டப் பல்கலைக்கழகத்தின் இணையதளத்திலும் (www.tndalu.ac.in) மாணவர்கள் தெரிந்துகொள்ளலாம்.
கலந்தாய்வுக்கான அழைப்புக்கடிதம் சம்பந்தப் பட்ட மாணவர் களுக்கு தபால் மூலம் அனுப்பப்படும். ஒருவேளை குறிப்பிட்ட கட் ஆஃப் மதிப்பெண்ணுக்குள் இருந்தும் அழைப்புக்கடிதம் வராவிட்டால்கூட அத்தகைய மாணவர்களும் குறிப்பிட்ட தேதியில் நேரடியாக கலந்தாய்வுக்கு வந்துவிடலாம் என்று சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.