

லோக் ஆயுக்தா குறித்து ஆளுநர் உரையில் கூறப்படவில்லை. அதைக் கொண்டுவரும் முயற்சி யில் அரசு ஈடுபட வேண்டும் என்று சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலி யுறுத்தினார்.
ஆளுநர் உரைக்கு நன்றி தெரி விக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலை வர் மு.க.ஸ்டாலின் நேற்று பேசியதாவது:
தமிழக முதல்வருக்கும், அமைச் சர்களுக்கும் திமுக சார்பில் வாழ்த் துகளை தெரிவித்துக் கொள் கிறேன். தமிழகத்தின் பிரச்சினை கள் நாளுக்குநாள் பல்கிப் பெருகி வருகின்றன. ஆளுநர் உரையில் இந்த ஆண்டுக்கான கொள்கை அறிவிப்பு என்ற இலக்கணத்தை மீறி, எதை எதையோ பட்டியல் போட்டு பக்கத்தை நிரப்பி யுள்ளனர்.
ஆளுநர் உரையில், மத்திய வரி பகிர்வில் ஏற்பட்ட பாதிப்பை சீரமைக்க சிறப்பினமாக ரூ.2 ஆயிரம் கோடி கோரப்பட்டுள்ளது. இலங்கை பிடித்து வைத்துள்ள தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க வேண்டும். கடும் வறட் சிக்காக பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.39,567 கோடியை விடு விக்க வேண்டும் என்பன உள்ளிட்ட மத்திய அரசின் உதவியை கோரி யிருக்கும் அனைத்துப் பிரச்சினை களும் மாநிலத்தின் நலனுக்கு உரியவை. அதன் அடிப்படையில் அந்த உதவிகளை வழங்க மத்திய அரசை நானும் கேட்டுக் கொள் கிறேன்.
காவிரியில் தண்ணீர் இல்லை. 5 ஆண்டுகளாக குறுவை, இந்த ஆண்டு சம்பா சாகுபடியும் இல்லை. ஏரி, ஆறு, குளம் தூர் வாரப்படவில்லை. குடிநீர் பஞ்சம் குலைநடுங்க வைக்கிறது. தூக்கம் கலைக்காத அரசு; தூக்கத்தை தொலைத்த மக்கள்.
7-வது ஊதியக் குழுவை நியமித்து, அதன் பரிந்துரைகளை மத்திய அரசு நடைமுறைப்படுத்திய பின்பும், மாநில அரசு பணியாளர் களுக்கு இன்னும் அவை வழங்கப் படவில்லை. அரசுத் துறையில் 4 லட்சம் காலிப் பணியிடங்களை வைத்துக்கொண்டு, வேலை யில்லா திண்டாட்டத்தை போக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எதுவும் இல்லை.
கடந்த 5 ஆண்டுகளில் மட்டு மின்றி, மீண்டும் ஆட்சிக்கு வந்து இந்த அவையில் 110 விதியின்கீழ் படிக்கப்பட்ட திட்டங்கள் இன்னும் 70 சதவீதம் நிறைவேறவில்லை. அத்திக்கடவு - அவினாசி திட்டம் தாமதமாவது கவலை அளிக்கிறது. அந்த திட்டத்தை மாநில அரசின் நிதியில் இருந்து போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும்.
விவசாயிகள் தற்கொலை விவ காரத்தில் மாவட்ட ஆட்சியர்களின் அறிக்கையை விரைவாகப் பெற்று உடனடியாக நிவாரண நிதியை அளிப்பதுடன், அவர்களில் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். லோக் ஆயுக்தா குறித்து ஆளுநர் உரையில் இடம்பெறவில்லை. அதைக் கொண்டுவரும் முயற்சியில் அரசு ஈடுபட வேண்டும்.
அவையில் இன்று காலை 110-வது விதியின்கீழ் முதல்வர் ஓர் அறிவிப்பை வெளியிட்டார். அதில் மீனவர்களுக்கு நிரந்தர மீன் சந்தை கட்டித் தரப்படும், நிவாரண உதவிகள் வழங்கப்படும் என கூறி யுள்ளார். மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த தாய்மார்கள், குழந்தை கள், சிறுவர்கள் அதிகமாக தாக் கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உரிய நிவாரணத் தொகை வழங்க வேண்டும்.
கொள்கை அறிவிப்பு இல்லை
ஆளுநர் உரையில் இந்த ஆண் டுக்கான கொள்கை அறிவிப்பு எதுவும் இல்லை. மக்களின் எதிர் பார்ப்புகள் என்பது அவர்கள் சந்தித்து வரும் பிரச்சினைதான். அதற்கு தீர்வு காணத் தேவையான புதிய வழிமுறைகளும், வாய்ப்பு களும் ஆளுநர் உரையில் இல்லை. இது ஒரு கம்பெனியின் ஆண்டு அறிக்கைபோல அமைந்துள்ளது. ஏராளமான காரியங்கள் நடப் பதைப்போல ஒரு பிரமையை ஏற் படுத்தும் முயற்சி இது. ஆளுநர் உரை ‘கானல் நீர்; கண்ணுக்குப் புலப்படாத ஒரு பொருட்காட்சி’.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.