Published : 18 Nov 2014 12:06 PM
Last Updated : 18 Nov 2014 12:06 PM

கீழே விழுந்த கிளையல்ல நாங்கள்: ஜி.கே.வாசன்

நாங்கள் மரத்தில் இருந்து விழுந்த கிளையல்ல; ஆலம் விதை. விருட்சமாக வளர்ந்து, தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை மலரச் செய்வோம் என்று ஜி.கே.வாசன் கூறினார்.

புதிய இயக்கத்துக்கான அழைப்புக் கூட்டம், அரியலூர் மாவட்டம் திருமானூரில் நேற்று நடைபெற்றது. புதிய இயக்கம் தொடக்கம், திருச்சி மாநாடு தொடர்பாக தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார் ஜி.கே.வாசன்.

சென்னையில் நடைபெற்ற நேரு பிறந்த நாள் கூட்டத்தில், "காங்கிரஸ் என்பது மரம். அதை விட்டுப்போனவர்கள் மரத்திலிருந்து விழுந்த கிளை" என்று ப.சிதம்பரம் பேசியிருந்தார். இதற்கு பதில் அளிக்கும் வகையில், "நாங்கள் மரத்திலிலிருந்து விழுந்த கிளையல்ல; ஆலம் விதை. விருட்சமாக வளர்ந்து காமராஜர் நல்லாட்சியை மலரச் செய்வோம்" என்று ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது: கடந்த சில நாட்களாக பொதுமக்கள் மற்றும் பல்வேறு கட்சியினரைச் சந்தித்து வருகிறேன். அனைவருமே எங்களது புதிய இயக்கத்தை வரவேற்றுள்ளனர். திருச்சி மாநாட்டில் எங்களுடன் இணைய பல்வேறு அமைப்பினர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

மாநாட்டின் முன்னேற்பாடாக, ஒலி நாடா வெளியீடு, வாகனப் பிரச்சாரத்தைத் தொடங்கியுள் ளோம். மாபெரும் அரசியல் மாற் றமாக, வரலாற்றுத் திருப்புமுனைக் கூட்டமாக திருச்சி மாநாடு அமையும்.

காவிரியின் குறுக்கே புதிய அணைகள் கட்டும் கர்நாடக அரசுக்கு எதிரானப் போராட்டத் துக்கு எங்களது புதிய இயக்கம் ஆதரவளிக்கும். தமிழக மீனவர்கள் தாக்கப்படும் பிரச்சினையில் நிரந்தரத் தீர்வைக் காண மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும். விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் குறைந்து கொண்டே செல்கிறது. அவர்களைக் காக்க அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x