

தமாகா மாநில மகளிர் அணித் தலைவர் உட்பட அக்கட்சியின் முன்னாள் எம்எல்ஏக்கள் 3 பேர் நேற்று அதிமுகவில் இணைந்தனர். தேமுதிகவின் திருவாரூர் மாவட்ட செயலாளர் உட்பட மாவட்ட முக்கிய நிர்வாகிகள் அனை வரும் கூண்டோடு அதிமுகவில் இணைந்தனர்.
தமாகா மகளிர் அணித் தலைவரும், கோவை மேற்கு தொகுதி முன்னாள் எம்எல்ஏவுமான ஏ.எஸ்.மகேஸ்வரி, முன்னாள் எம்எல்ஏக்கள் வி.திருஞானசம்பந்தம் (பேராவூ ரணி), எம்.ராம்குமார் (பாபநாசம்) ஆகியோர் தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவை சந்தித்து அக்கட்சியில் இணைந்தனர்.
திருவாரூர் மாவட்ட தேமுதிக செயலாளர் எம்.ஆர்.பாலாஜி, மாவட்ட துணைச் செயலாளர் கள் என்.மோகன்குமார், எம்ஆர்டி ராமச் சந்திரன், ஒன்றியச் செயலாளர்கள் கே.விஜய காசி (திருவாரூர்), என்.வி.குமார் (கொரடாச் சேரி), எஸ்.ராஜசேகர் (வலங்கைமான்), கே.முருகேசன் (முத்துப்பேட்டை), எஸ்.வி.முருகானந்தம் (கோட்டூர்), எஸ்.யு.கென்னடி (மன்னார்குடி), என்.மவுனகுரு (நன்னிலம்), ஜி.ரமேஷ் (நீடாமங்கலம்) உள்ளிட்ட திருவா ரூர் மாவட்ட தேமுதிக முக்கிய நிர்வாகிகள் அனைவரும் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.