

தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் செய்தியாளர் களிடம் நேற்று கூறியதாவது:
நாளை மறுநாள் (ஏப்ரல் 12) வாக்குப் பதிவு நடைபெற இருந்த நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட் டுள்ளது. இதனை நான் ஆதரிக் கவோ, எதிர்க்கவோ விரும்ப வில்லை. ஒரு தொகுதி காலியா னால் அன்றிலிருந்து 6 மாதங்க ளுக்குள் தேர்தல் நடத்தி அந்த இடத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக கடந்த 2016-ல் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தேர்தல் ரத்து செய்யப் பட்டது. ஆனால், அங்கு மீண்டும் தேர்தல் நடந்தபோது மீண்டும் பணம் விநியோகம் செய்யப்பட்டது. அதுபோல ஆர்.கே.நகரிலும் மீண்டும் பணம் விநியோகம் செய்தால் தேர்தல் ஆணையம் என்ன செய்யப் போகிறது? சட்டப்படி ஜூன் 5-ம் தேதிக்குள் தேர்தலை நடத்தப் போகிறதா? அல்லது 6 மாதங்களுக்குப் பிறகு தேர்தலை நடத்த சட்டத் திருத்தம் கொண்டுவரப் போகிறதா?
தேர்தலை நேர்மையாக நடத்த என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது? என்பதற்கு தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க வேண்டும். ஆர்.கே.நகரில் திட்ட மிட்டபடி தேர்தல் நடந்திருந்தால் காங்கிரஸின் கூட்டணி கட்சியான திமுக வெற்றி பெற்றிருக்கும். தேர்தல் ஆணையத்தின் முடிவுக்குள் பின்னால் மத்திய பாஜக அரசு இருப்பதாக தமிழகம் மக்களிடம் சந்தேகம் எழுந்துள் ளது.