

வெப்ப சலனம் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த 4 நாட்களுக்கு சில இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெப்ப சலனம் மற்றும் தென் மேற்கு பருவ காற்றால் தமிழகத் தில் கடந்த வாரம் பரவலாக சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. காலநிலை மாற்றம் காரணமாக கடந்த இரு நாட்க ளாக வெப்பம் அதிகரித்து காணப் படுகிறது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட செய்தியில், “வெப்ப சலனம் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த 4 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறத்தைப் பொருத்த வரை வானம் ஓரளவு மேகமூட்டத் துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸா கவும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் நடுவட்டம், கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் தலா 10 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.