

குளச்சல் துறைமுக விவ காரத்தில் மீனவர்களின் வாழ் வாதாரம் பாதிக்காமல் மத்திய அரசு முடிவு எடுக்க வேண்டும் என்று மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி தெரி வித்தார்.
மத்திய அரசு கொண்டுவர உள்ள புதிய கல்வி கொள் கையைக் கண்டித்து, பாளை யங்கோட்டையில் நேற்று நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியதா வது:
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக மாநில, மாவட்ட அளவில் போராட்டங்களை நடத்துவது குறித்து கட்சித் தலைமையிடம் தெரிவித்து முடிவு அறிவிக் கப்படும்.
குளச்சல்- இனயம் துறை முகத் திட்டம் குறித்து, மீனவர்களின் கருத்துகளைக் கேட்டறிந்து, அவர்களின் வாழ் வாதாரம் பாதிக்காமல் மத்திய அரசு முடிவு எடுக்க வேண்டும் என்றார்.