

கூடங்குளம் முதல் அணு உலை நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது இதயத்துக்கு இதமான செய்தி என்று காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் வரவேற்றுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''கூடங்குளம் அணுமின் உற்பத்தி நிலையம் ரஷ்ய பிரதமர், நம் நாட்டு பிரதமர், தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆகியோரால் நாட்டுக்கு அர்பணிக்கப்பட்டுள்ளது இதயத்துக்கு இதமான செய்தியாகும்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி ரஷ்ய அரசோடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, இப்போது நாம் மின்சாரம் பெற வாய்ப்பளித்தார். இதுதவிர, மேலும் சில அணு உலைகள் வர இருக்கின்றன என்பது, தமிழ்நாடு மின் மிகை மாநிலமாக மாறுவதோடு, இந்தியாவின் பிற மாநிலங்களுக்கும் மின்சாரத்தை அளிக்கும்'' என்று குமரி அனந்தன் கூறியுள்ளார்.