Published : 09 Jun 2016 01:01 PM
Last Updated : 09 Jun 2016 01:01 PM

சரோஜினி தாமோதரன் அறக்கட்டளை கல்வி உதவித்தொகை பெற பள்ளி மாணவர்களிடம் விண்ணப்பம் வரவேற்பு

சரோஜினி தாமோதரன் அறக்கட்டளை வழங்கும் கல்வி உதவித்தொகையை பெற மாணவ, மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது தொடர்பாக அந்த அறக்கட்டளை வெளியிட்டுள்ள பத்திரிகை குறிப்பில், "சரோஜினி தாமோதரன் கல்வி அறக்கட்டளை அரசுசாராத அமைப்பாகும்.

இது கடந்த 1999-ல் குமாரி சிபுலால் மற்றும் எஸ்.டி.சிபுலால் (இன்போசிஸ் இணை நிறுவனர் - முன்னாள், ஆகியோரால் நிறுவப்பட்டது.

சரோஜினி தாமோதரன் அறக்கட்டளையின் சார்பாக வித்யாதன் கல்வி உதவித்தொகை பெற தமிழ்நாட்டில் உள்ள 11-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பயில இருக்கும் மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்த கல்வி உதவித்தொகையைப் பெற மாணவர்களின் குடும்ப வருமானம் ஆண்டிற்கு 2 லட்சத்துக்கு குறைவாக இருக்க வேண்டும். முந்தைய வருட பத்தாம் வகுப்பு தேர்வில் 90% மதிப்பெண் அல்லது A+ தரம் பெற்றிருக்க வேண்டும். ஊனமுற்ற மாணவர்கள் 75% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

தகுதியுடைய மாணவர்கள் ஜூன் 6 2016 முதல் ஜூலை 31 வரை > www.vidyadhan.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கவும்.

மேலும் விவரங்களுக்கு vidyadhan.tamilnadu@sdfoundationindia.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம். தொலைபேசி எண்கள்: +91 9739512822, +91 7339659929" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x