கேரளத்தில் 2 நாட்களில் தென்மேற்கு பருவமழை: சென்னை வானிலை மையம் அறிவிப்பு

கேரளத்தில் 2 நாட்களில் தென்மேற்கு பருவமழை: சென்னை வானிலை மையம் அறிவிப்பு
Updated on
1 min read

கேரள மாநிலத்தில் அடுத்த 2 நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என்று சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்தது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது:

கேரளத்தில் அடுத்த 2 நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. வழக்கமாக இந்த பருவமழை ஜூன் முதல் செப்டம்பர் வரை நீடிக்கும். இந்த காலகட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மழை பெய்யும்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த 4 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் மழையோ, இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அடுத்த 2 நாட்கள் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என்றார் எஸ்.பாலச்சந்திரன்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in