Last Updated : 19 Mar, 2017 11:22 AM

 

Published : 19 Mar 2017 11:22 AM
Last Updated : 19 Mar 2017 11:22 AM

ஆன்லைன் மருந்து விற்பனையை அனுமதிக்கலாமா? - மக்களிடம் கருத்து கேட்க மத்திய அரசு முடிவு

ஆன்லைனில் மருந்து விற் பனைக்கு அனுமதி தர முடிவு செய்துள்ள மத்திய அரசு, பொதுமக்கள் தங்களுடைய கருத்துகளை தெரிவிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.

ஆன்லைன் மூலம் மருந்து விற்பனையை அனுமதிக்கக் கோரி ஏராளமான கோரிக்கைகள் மத்திய அரசுக்கு வந்தது. இதையடுத்து மத்திய சுகாதாரத் துறை தற்காலி கமாக ஒரு கமிட்டியை அமைத்து ஆன்லைன் மூலம் மருந்து விற்பனை செய்வது குறித்து ஆய்வு நடத்தியது. அந்த கமிட்டி தனது ஆய்வறிக்கையை மத்திய சுகாதாரத் துறையிடம் சமர்ப்பித்தது. இதையடுத்து ஆன்லைனில் மருந்து விற்பனையை அனுமதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுபற்றி பொதுமக்கள், மருந்து விற்பனையாளர்கள், டாக்டர்கள், தன்னார்வலர்கள் தங்களுடைய கருத்தை epharmacy.drugs-mohfw@gov.in என்ற இ-மெயிலில் தெரி விக்கலாம் என்று மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தமிழக அரசு கருத்து

இதுபற்றி தமிழக மருந்து கட்டுப்பாட்டுத் துறை இயக்குநர் அப்துல்காதர் கூறுகையில், “ஆன் லைனில் மருந்து விற்பனை செய் தால் என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும் என்பது குறித்து எங்க ளுடைய கருத்தை தெரிவித்து இருக்கிறோம். மத்திய அரசு என்ன முடிவு எடுக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை” என்றார்.

தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.ராமச்சந்திரன் கூறியதாவது:

ஏற்கெனவே அனுமதியின்றி சில நிறுவனங்கள் ஆன்லைனில் மருந்துகளை விற்பனை செய்து வருகின்றனர். இதனை தடுக்கக் கோரியும், ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்கக் கோரியும் நாடுமுழுவதும் மருந்து வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மே மாதம் போராட்டம்

ஆன்லைனில் மருந்து விற் பனையை அனுமதித்தால் போதை மருந்துகள் மற்றும் தடை செய்யப்பட்ட மருந்துகள் விற்பனை செய்யப்படும். மற்றப் பொருட் களைப் போல உயிர் காக்கும் மருந்துகளை ஆன்லைனில் விற் பனை செய்தால் ஏற்படும் பாதிப்பு கள் பற்றி மத்திய அரசிடம் தெரி வித்துள்ளோம். ஆன்லைன் மருந்து விற்பனையை அனுமதிக்கக்கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி வரும் மே மாதம் முதல் வாரத் தில் நாடு முழுவதும் மருந்து வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட முடிவு எடுத்து இருக்கிறோம்.

நாடு முழுவதும் பதிவு செய்த டாக்டர்கள் எவ்வளவு பேர் இருக்கி றார்கள். எவ்வளவு மருந்துகள் இருக்கிறது. இந்த தகவல்கள் எதுவும் பொதுமக்களுக்கும் அர சுக்கும் முழுமையாக தெரியாது. இதனை முறைப்படுத்தி, ஆன்லை னில் கொண்டுவர வேண்டும். அதன்பின்னர் தான், ஆன்லைனில் மருந்து விற்பனைக்கு அனுமதி தருவது பற்றி மத்திய அரசு முடிவு செய்ய வேண்டும். அதுவரை ஆன்லைனில் மருந்து விற்பனை செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கக்கூடாது.

இவ்வாறு எஸ்.ராமச்சந்திரன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x