

சேலம் அருகே அமைச்சர் எடப் பாடி பழனிச்சாமி பங்கேற்ற பொதுக்கூட்ட மேடையில் பெட் ரோல் பாக்கெட்டை வீசியது தொடர் பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த ஜலகண்டாபுரம் பேருந்து நிலையம் அருகே நேற்று முன்தினம் இரவு அதிமுக பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தனது பேச்சை நிறைவு செய்த போது, பெட்ரோல் அடைக்கப் பட்ட பாலித்தீன் பாக்கெட்டை ஒருவர் திடீரென மேடையை நோக்கி வீசினார்.
மேடை அருகே சூடாக இருந்த ஸ்பீக்கர் பெட்டி மீது பெட்ரோல் பாக்கெட் விழுந்து தீப்பிடித்தது. அங்கு இருந்தவர்கள் உடனடியாக தீயை அணைத்தனர். பெட்ரோல் பாக்கெட்டை வீசியவரை அதிமுகவி னர் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
பெட்ரோல் பாக்கெட்டை வீசிய வர் ஜலகண்டாபுரம் சந்தைப் பேட்டை பகுதியைச் சேர்ந்த ஆனந்த குமார்(30) என்பது தெரிந்தது.
இது தொடர்பாக ஆனந்தகுமார் மற்றும் அவரது நண்பர்கள் உள்ளிட்ட 13 பேர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 13 பிரிவுகளில் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். ஆனந்தகுமார், அவரது நண்பர்கள் சந்தோஷ், ஐய்யப்பன், கலையரசன், கல்லூரி மாணவர் ராஜூ, சுரேஷ் ஆகியோரை கைது செய்தனர். யுவராஜ், மேகநாதன், இன்பநாதன், இளங்கோவன், மணி, வெங்கடேஷ், கார்த்திக் ஆகிய 7 பேரை தேடி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸார் கூறும் போது, “ஆனந்தகுமார் உள்ளிட்ட அவரது நண்பர்கள் தொடக்கத்தில் தேமுதிகவில் இருந்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்னர் திமுக வில் இணைந்துள்ளனர்.
ஆனந்தகுமாரும் அவனது நண்பர்களும் மது போதையுடன் வந்து, பெட்ரோல் பாக்கெட்டை வீசியுள்ளனர். கட்சி அடிப் படையிலான விரோதமே பெட்ரோல் வீச்சுக்கு காரணம்” என்றனர்.