மதுரை அரசு மருத்துவ கல்லூரி பேராசிரியருக்கு அமெரிக்கா விருது: புற்றுநோய் கதிரியக்க சிகிச்சைக்கு புதிய கருவி கண்டுபிடிப்பு

மதுரை அரசு மருத்துவ கல்லூரி பேராசிரியருக்கு அமெரிக்கா விருது: புற்றுநோய் கதிரியக்க சிகிச்சைக்கு புதிய கருவி கண்டுபிடிப்பு
Updated on
1 min read

கர்ப்பப்பை புற்றுநோயை துல்லியமாகக் குணப்படுத்த உதவும் வகையில் புதிய கருவியை கண்டுபிடித்த மதுரை அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியருக்கு அமெரிக்கா விருது வழங்கியுள்ளது.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை புற்றுநோய் கதிரியக்க இயற்பியல் பிரிவில் முதுநிலை உதவி பேராசிரியர் முனைவர் எஸ். செந்தில்குமார். இவர் புற்றுநோய் கதிரியக்க சிகிச்சையில் கர்ப்பப்பை வாய் புற்றுநோயை துல்லியமாக குணப்படுத்த உதவும் நவீன உபகரணத்தை கண்டுபிடித்துள்ளார். இதையடுத்து, செந்தில்குமார் அமெரிக் காவில் வாஷிங்டனில் அமெரிக்கன் மருத்துவ இயற்பியல்துறை சார்பில் நடந்த நிகழ்ச்சியில் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து பேராசிரியர் எஸ். செந்தில்குமாரை அரசு மருத்துவமனை டீன் எம்.ஆர்.வைரமுத்துராஜூ பாராட்டினார்.

இதுகுறித்து எஸ்.செந்தில்குமார் கூறியது: பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய், கதிரியக்க சிகிச்சை மூலம் குணப்படுத்தப்படுகிறது. பெண்களுக்கு கர்ப்பப்பை வாய் ஒரே மாதிரி அளவில் இருக்காது. ஒவ்வொரு பெண்களுக்கும் இந்த கர்ப்பப்பை வாய் அளவு மாறுபடுகிறது. இந்த கர்ப்பப்பை வாய் உருவத்துக்கு தகுந்தாற்போல் 3டி பிரிண்டிங் டெக்னாலஜியில் இந்த கருவியை கண்டுபிடித்துள்ளேன். இந்த கருவி மூலம் எந்த இடத்தில் கர்ப்பப்பையில் புற்றுநோய் ஏற்பட்டுள்ளது என்பதை துல்லியமாக கண்டறிந்து சிகிச்சை அளிக்கலாம் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in