ஜெயலலிதா விளக்கத்தை தேர்தல் ஆணையம் ஏற்க மறுப்பு

ஜெயலலிதா விளக்கத்தை தேர்தல் ஆணையம் ஏற்க மறுப்பு
Updated on
1 min read

ஏற்காடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் தேர்தல் நடத்தை விதிமீறிய புகாரில், முதல்வர் ஜெயலலிதாவின் விளக்கத்தை தேர்தல் ஆணையம் ஏற்க மறுத்துவிட்டது.

'மின்னம்பள்ளி பகுதியில் பிரசாரம் செய்தபோது, முதல்வர் ஜெயலலிதா பல்வேறு சிறப்புத் திட்டங்களை நிறைவேற்றித் தருவதாக வாக்குறுதி அளித்துள்ளார். இது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய செயலாகும்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து, அரசு பொறுப்புகளில் உள்ளவர்கள் யாரும் வாக்குறுதிகள் அளிக்கக் கூடாது என்று என்பது தேர்தல் ஆணையத்தின் விதிமுறையாகும். எனவே, முதல்வர் ஜெயலலிதா மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று திமுக புகார் அளித்திருந்தது.

இந்தப் புகார் தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.

இதைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையத்திற்கு விளக்கம் அளித்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, தாம் தேர்தல் நடத்தை விதிமுறைகளை பிரச்சாரத்தின் போது மீறவில்லை என்றும், தனது பிரச்சாரத்தில் மக்களுக்கு தேவையான அறிக்கை மட்டுமே இடம் பிடித்திருந்ததாகவும் நீண்ட கடிதம் எழுதியிருந்தார்.

இந்த நிலையில், முதல்வர் ஜெயலலிதாவின் விளக்கத்தை தேர்தல் ஆணையம் ஏற்க மறுத்துவிட்டது. அந்த விளக்கத்துக்கு கடும் அதிருப்தி தெரிவித்த தேர்தல் ஆணையம், தேர்தல் பிரச்சாரத்தின்போது வாக்காளர்களிடம் புதிய திட்டங்கள் குறித்துப் பேசக் கூடாது என்றும், எச்சரிக்கையுடன் பேச வேண்டும் என்றும் அறிவுறை வழங்கியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in