திருமாவளவன் மீது புகார் கொடுத்த பெண்கள் அமைப்பு தலைவிக்கு தொலைபேசியில் கொலை மிரட்டல்

திருமாவளவன் மீது புகார் கொடுத்த பெண்கள் அமைப்பு தலைவிக்கு தொலைபேசியில் கொலை மிரட்டல்
Updated on
1 min read

திருமாவளவன் மீது புகார் கொடுத்த பெண்கள் அமைப்பு நிர்வாகிக்கு விடுதலை சிறுத்தை கள் கட்சியை சேர்ந்தவர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ள தாக போலீஸில் புகார் கொடுக் கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சுதேசி பெண்கள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவி கலைச்செல்வி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் ஒரு புகார் மனு கொடுத்தார்.

அந்த மனுவில், ‘‘சுவாதி கொலை செய்யப்பட்ட சம்பவத் தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், சுவாதியின் கண்ணியத்தையும், நற்பெயரையும் இழிவுபடுத்தும் வகையில் பேசுகிறார். அவரது பேச்சுக்கள் சுவாதி கொலையில் கைதான ராம்குமாருக்கு மட்டு மின்றி பல குற்றவாளிகளுக்கும் ஆதரவாக இருக்கிறது. இது போன்று குற்றங்களை தூண்டி வரும் திருமாவளவனை கைது செய்ய வேண்டும்” என்று கூறியிருந்தார்.

அதைத் தொடர்ந்து நேற்று அவரது செல்போனுக்கு வெவ் வேறு எண்களில் இருந்து பலர் தொடர்பு கொண்டு பேசி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். அதைத்தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த வர்கள் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக போலீஸில் கலைச்செல்வி நேற்று புகார் மனு கொடுத்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in